INDvsENG.. 147 வருட கிரிக்கெட் வரலாற்றில்.. நாளை முதல்முறையாக நடக்க போகும் கிரேட் சாதனை

0
623
ICT

ஜனவரி மாத இறுதியில் ஆரம்பித்து மார்ச் மாதம் நடுப்பகுதி வரையில் நடந்து கொண்டிருக்கும், இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடர், நாளை முடிவுக்கு வருவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கின்றன.

இந்த தொடருக்கு அறிவிக்கப்பட்ட ஐந்து மைதானங்களுமே பெரும்பாலும் அதிக டெஸ்ட் போட்டிகள் நடக்காத மைதானங்கள். மேலும் வழக்கமாக இந்தியாவில் அமைக்கப்படும் சுழல் பந்துவீச்சுக்கு மிக சாதகமான ஆடுகளங்கள் இந்த முறை அமைக்கப்படவில்லை.

- Advertisement -

இந்த முறை பேட்டிங் செய்வதற்கு சாதகமான ஆடுகளங்கள் கொடுக்கப்பட்டதால், பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார்கள் குறிப்பாக இந்திய பேட்ஸ்மேன்கள் ஆதிக்கமே அதிகம் இருந்தது. இந்தியா தரப்பில் மொத்தம் ஏழு சதங்கள் அடிக்கப்பட்டிருக்கின்றன. இதில் இரண்டு இரட்டை சதங்கள் அடக்கம். இங்கிலாந்து தரப்பில் இரண்டு சதங்கள் மட்டுமே இதுவரையில் அடிக்கப்பட்டிருக்கின்றன.

மேலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த தொடரில் பெரிய அளவில் சிக்ஸர் மழை பொழிந்து கொண்டிருக்கிறது. இந்திய அணியின் இளம் இடது கை பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் பல நட்சத்திர டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தங்கள் வாழ்க்கை முழுவதும் அடித்திருக்கும் சிக்ஸர்களை, இந்த ஒரே தொடரில் அடித்து முடித்து விட்டார்.

மேலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் மூலமாக அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட இரு நாடுகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடராக இந்த தொடர் உலகச்சாதனை படைத்திருந்தது.

- Advertisement -

இதில் மேலும் நாளை ஒரு மெகா உலக சாதனை நடைபெறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக காணப்படுகிறது. இதுவரையில் இந்த தொடரில் மொத்தம் 99 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டிருக்கின்றன. நாளை இந்தியா அல்லது இங்கிலாந்து அணி ஒரு சிக்சர் அடித்தார், ஒரு தொடரில் மூன்று இலக்கத்தில் சிக்ஸர் அடிக்கப்பட்ட முதல் சம்பவமாக இது கிரிக்கெட் வரலாற்றில் பதிவாகும்.

இதையும் படிங்க : “கம்மின்ஸ்க்கு 20.50 கோடி.. சர்பராஸை யாருமே வாங்கல.. வெட்டேரி செய்தது என்ன நியாயம்?” – ஆகாஷ் சோப்ரா விமர்சனம்

இரு நாடுகளுக்கு இடையேயான ஒரு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அதிக சிக்ஸர்கள்:

இந்தியா – இங்கிலாந்து – 2024 – 99 சிக்ஸர்கள்
இங்கிலாந்து – ஆஸ்திரேலியா – 2023 – 73 சிக்ஸர்கள்
ஆஸ்திரேலியா – இங்கிலாந்து – 2013-14 – 65 சிக்ஸர்கள்
இந்தியா – தென் ஆப்பிரிக்கா – 2019 – 65 சிக்ஸர்
பாகிஸ்தான் – நியூசிலாந்து – 2014-15 – 59 சிக்ஸர்