பெண்கள் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கான ஏலம் நடத்தப்பட்டதில், அதிக விலை கொடுத்து எடுக்கப்பட்ட டாப் 10 வீராங்கனைகள் பட்டியலை இங்கு காண்போம்.
கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து ஆண்கள் கிரிக்கெட்டுகான ஐபிஎல் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பல உச்சங்களையும் தொட்டிருக்கிறது. ஐபிஎல் லீகில் சிறப்பாக விளையாடிய பல உள்ளூர் வீரர்கள் இந்திய அணியிலும், வெளிநாட்டு உள்ளூர் வீரர்கள் அவர்களது சொந்த நாட்டிற்காகவும் விளையாடும் அளவிற்கு உயர்ந்திருக்கின்றனர்.
சமீபகாலமாக பெண்கள் கிரிக்கெட்டை வளர்ப்பதற்கு என்று பல்வேறு முனைப்புகள் முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் இந்திய கிரிக்கெட் வாரியமும் தனது முக்கிய பங்களிப்பை கொடுத்து வருகிறது.
இதுவரை ஆண்கள் கிரிக்கெட்டிற்கு மட்டுமே ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டு முதல் பெண்கள் கிரிக்கெட்டுக்கும் ஐபிஎல் தொடர் நடத்தப்படும் என்று அறிவிப்பு விடுத்தது. பெண்கள் ஐபிஎல் அணிகளின் ஏலம் நடத்தப்பட்டது. இந்த சீசனில் 5 பெண்கள் அணிகள் இடம்பெறுகின்றன.
ஐந்து அணிகளும் தங்களது அணிக்கு ஐபிஎல் ஏலத்தில் 15 முதல் 18 வீராங்கனைகளை எடுத்துக் கொள்ளலாம். மேலும் பிளேயிங் லெவனில் ஐந்து வீராங்கனைகள் வெளிநாட்டு வீராங்கனைகளாக இருக்கலாம். இந்த ஐந்தில் ஒருவர் அசோசியேட் அணியின் வீராங்கனையாக இருக்க வேண்டும் என்கிற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டு இருந்தன.
வீராங்கனைகளை எடுப்பதற்கான ஏலம் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி மும்பையில் நடத்தப்பட்டது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளின் வீராங்கனைகளுக்கு போட்டி கடுமையாக இருந்தது.
நடந்து முடிந்த ஏலத்தில் அதிக விலை கொடுத்து எடுக்கப்பட்ட வீராங்கனை யார்? மற்றும் விலையுயர்ந்த முதல் 10 வீராங்கனைகளின் பட்டியலை இங்கு பார்ப்போம்.
பெண்களுக்கான ஐபிஎல் ஏலத்தில் மிகவும் விலையுயர்ந்த வீரர்கள்:
- ஸ்மிருதி மந்தனா (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்): ரூ 3.4 கோடி
- ஆஷ்லே கார்ட்னர் (குஜராத் ஜெயிண்ட்ஸ்): ரூ 3.2 கோடி
- நாட் ஸ்கிவர்-பிரண்ட் (மும்பை இந்தியன்ஸ்): ரூ 3.2 கோடி
- தீப்தி ஷர்மா (யுபி வாரியர்ஸ்): ரூ 2.6 கோடி
- ஜெமிமா ரோட்ரிக்ஸ் (டெல்லி கேப்பிடல்ஸ்): ரூ 2.2 கோடி
- பெத் மூனி (குஜராத் ஜெயிண்ட்ஸ்): ரூ 2 கோடி
- ஷஃபாலி வர்மா (டெல்லி கேப்பிடல்ஸ்): ரூ 2 கோடி
- பூஜா வஸ்த்ரகர் (மும்பை இந்தியன்ஸ்): ரூ 1.9 கோடி
- ரிச்சா கோஷ் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்): ரூ 1.9 கோடி
- ஹர்மன்ப்ரீத் கவுர் (மும்பை இந்தியன்ஸ்): ரூ 1.8 கோடி
- சோஃபி எக்லெஸ்டோன் (யுபி வாரியர்ஸ்): ரூ 1.8 கோடி