வீடியோ… 0, 1, W, 0, 1, 0, W, 2, 1, W, 0, 2… மும்பையை கதறவிட்ட குட்டி மலிங்கா… கலக்கலான கடைசி இரண்டு ஓவர்!

0
1916
Pathirana

இன்று ஐபிஎல் 16வது சீசனில் ஒட்டுமொத்த ஐபிஎல் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் தொடரின் அரசர்களான சென்னையும் மும்பையும் மோதிக் கொள்ளும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். சிறிய காயம் காரணமாக திலக் வர்மா இடம்பெறவில்லை. மும்பை அணிக்கு இந்த முறை துவக்கம் தர கேமரூன் கிரீன் மற்றும் இசான் கிஷான் இருவரும் வந்தார்கள்.

- Advertisement -

கடந்த ஆட்டங்கள் போல் இல்லாமல் இந்த முறை சென்னை அணியின் ஆரம்ப வேகப்பந்து வீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. கேமரூன் கிரீனை துஷார் தேஷ்பாண்டே 6 ரன்களிலும், இஷான் கிஷான் 7, ரோகித் சர்மா 0 கண்களிலும் தீபக் சகர் இருவரும் வெளியேற்றி மும்பைக்கு அதிர்ச்சி துவக்கம் தந்தார்கள்.

இதற்கு அடுத்து சேர்ந்த சூரியகுமார் மற்றும் இளம் வீரர் நெகில் வதேரா இருவரும் பொறுப்புடன் விளையாடி கொஞ்சம் அணிக்கு ஸ்கோர் கொண்டு வந்தனர். ஆனால் ரவீந்திர ஜடேஜா சூரியகுமார் யாதவை 26 ரன்னுக்கு வெளியேற்றினார்.

அடுத்து வதேரா உடன் ஸ்டப்ஸ் இணைந்து பொறுமையாக விளையாட ஆரம்பித்தார்கள். இளம் வீரர் வதேரா நெருக்கடியான நேரத்தில் பொறுப்பாக விளையாடி அணிக்கு அரை சதம் எடுத்தார். கடைசி கட்டத்தில் அவர் அதிரடிக்கு மாற நினைத்தபொழுது பதினெட்டாவது ஓவரில் பதிரனா வழக்கமான தனது யார்க்கர் மூலம் கிளீன் போல்ட் செய்து 64 ரன்களில் வெளியேற்றினார். அந்த ஓவரில் அவர் இரண்டு ரன் மட்டுமே தந்தார். இதற்கு அடுத்த ஆட்டத்தின் 19 ஆவது ஓவரில் துஷார் தேஷ்பாண்டே டிம் டேவிட்டை இரண்டு ரன்களில் வெளியேற்றினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து மீண்டும் 20 வது ஓவரை வீச வந்த பதிரனா மிகச் சிறப்பாக பந்துவீசி அர்ஷத் கான் மற்றும் ஸ்டப்ஸ் இருவரது விக்கட்டை கைப்பற்றி அந்த ஓவரில் ஐந்து ரன்கள் மட்டுமே தந்தார். மொத்தம் நான்கு ஓவர்கள் பந்து வீசிய அவர் 15 ரன்கள் மட்டும் தந்து மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ரன்கள் சேர்த்தது. தற்பொழுது இலக்கை நோக்கி சென்னை அணி விளையாடி வருகிறது. வதேராவை பதிரனா கிளீன் போல்ட் செய்த வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.