வருண் சக்கரவர்த்தி பற்றிய பதிவு.. விமர்சித்த ரோகித் சர்மா ரசிகர்கள்.. தக்க பதிலடி தந்த அஸ்வின்

0
77

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியின் போது அஸ்வின் போட்ட ஒரு டிவிட்டுக்கு ரோகித் சர்மா ரசிகர்கள் கோபமடைந்தனர். இதனால் கடுப்பான அஸ்வின், ரோகித் சர்மா ரசிகர்களை கடுமையாக சாடி இருக்கிறார். நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பந்து வீச பணிக்கப்பட்டது.

இதனை அடுத்து நியூசிலாந்து அணியின் வில் யங் மற்றும் ரச்சின் ரவீந்திரா அவர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். குறிப்பாக ரச்சின் ரவீந்தரா, சமி ஹர்திக் பாண்டியா ஆகியோரின் பந்துவீச்சை சுளுக்கு எடுத்தார். இதன் காரணமாக வேகப்பந்து வீச்சை நம்பினால் இனி சரி வராது என நினைத்த ரோகித் சர்மா வருண் சக்கரவர்த்தியை வந்து வீச அழைத்தார்.

- Advertisement -

கோபம் அடைந்த அஸ்வின்:

இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அஸ்வின், வருண் சக்கரவர்த்தி இவ்வளவு விரைவாக பந்துவீச வந்தது. இந்தியாவுக்கு நல்ல அறிகுறி கிடையாது என்று கூறியிருந்தார். இதற்கு ரோகித் சர்மா ரசிகர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். கேப்டன்ஷிப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும் என்றெல்லாம் கேள்வி கேட்டனர்.

இதனால் கடுப்பான அஸ்வின் நான் போட்ட டிவிட்டிருக்கும் கேப்டன்சிக்கும் என்ன சம்பந்தம். தனிப்பட்ட வீரர்கள் மீது உள்ள இந்த ரசிக மனப்பான்மை பைத்தியக்காரத்தனமாக இருக்கின்றது. நான் நியூசிலாந்து அணி எவ்வளவு வேகமாக நம்மை சுழற் பந்து வீச்சை வீச வைத்திருக்கிறது பாருங்கள் என்று குறிப்பிட்டு இருந்தேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.

- Advertisement -

இன்றைய ஆட்டத்தில் சமி 70 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுக்க இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் கட்டுக்கோப்பாக பந்து வீசினார்கள். இதில் வருண் சக்கரவர்த்தி 45 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

அஸ்வின் கணிப்பு

இதன் மூலம் நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்திருந்தது. இந்த போட்டி குறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்த அஸ்வின் இந்திய அணியின் கேம் சேன்ஜராக ஸ்ரேயாஸ்  தான் இருப்பார். அவர் சமீப காலமாக சிறப்பாக விளையாடியிருக்கிறார்.

இதையும் படிங்க: 4 வருஷம் ஆச்சு.. இனி என்ன ஆனாலும் ரோகித்தான் கிங்.. இனி அவருக்கு இந்த பிரச்சனை இல்லை – முகமது கைப்

2023 உலக கோப்பையிலும் அவர் அபாரமாக விளையாடினார். நியூசிலாந்துக்கு எதிராக நன்றாக ரன் சேர்த்திருக்கிறார். எனவே இறுதிப் போட்டியில் அவர் முக்கிய பங்கு ஆற்றுவார் என்று குறிப்பிட்டு இருந்தார்.
தற்போது ரோகித் சர்மா விராட் கோலி போன்ற சீனியர் வீரர்கள் ஆட்டம் இருந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் 48 ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -