ரன்களை வாரிக்கொடுத்தாலும், சிஎஸ்கேவை டெத் ஓவர்ல காப்பாற்றி வருவதே துஷார் தேஷ்பாண்டே தான், இல்லைனா சிஎஸ்கே கதை கந்தல் – இளம் சிஎஸ்கே வீரரை பாராட்டிய சுனில் கவாஸ்கர்!

0
373

டெத் ஓவர்களில் ரன்களை வாரிக்கொடுத்தாலும், விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்து சிஎஸ்கேவை அவ்வப்போது காப்பாற்றுகிறார் துஷார் தேஷ்பாண்டே என்று பேசியுள்ளார் சுனில் கவாஸ்கர்.

சிஎஸ்கே அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இந்த சீசனில் வளர்ந்திருப்பவர் துஷார் தேஷ்பாண்டே. ஒவ்வொரு போட்டியிலும் தொடர்ந்து இம்பேக்ட் வீரராக உள்ளே எடுத்து வரப்பட்டு வருகிறார்.

- Advertisement -

சிஎஸ்கே அணிக்கு இந்த சீசனில் டெத் ஓவர் வீச ஸ்பெஷலிஸ்ட் வீரராக பார்க்கப்பட்ட பிரட்டோரியஸ் உள்ளே எடுக்கப்படவில்லை, சிசன்டா மகாலா வந்த 2ஆவது போட்டியிலேயே காயம் காரணமாக வெளியேற்றப்பட்ட்டார். ஆகையால் அந்த இடத்திற்கு துஷார் தேஷ் பாண்டே பயன்படுத்தப்பட்டு வருகிறார்.

10 ரன்களுக்கும் குறையாமல் விட்டுக் கொடுத்தாலும் முக்கியமான கட்டத்தில் விக்கெட்டுகளை எடுத்து விடுவதால் இது சிஎஸ்கே அணிக்கு நன்மையிலேயே இதுவரை முடிந்திருக்கிறது. இந்த சீசனில் எட்டு போட்டிகளில் 14 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெடுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு இணையாக இருந்தாலும், அவரேஜில் 22 ரன்கள் இருப்பதால், அதனடிப்படையில் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

இந்நிலையில் துசார் தேஷ்பாண்டே தனக்கு வராத விஷயத்தை வளர்த்துக் கொண்டு சிஎஸ்கே அணியை பல இக்கட்டான சூழல்களில் இருந்து காப்பாற்றியுள்ளார் என பேசியுள்ளார் சுனில் கவாஸ்கர்.

- Advertisement -

“துஷார் தேஷ்பாண்டே டெத் ஓவர்களில் போதிய பந்துவீச்சு அனுபவம் இல்லாதவர் என்று தெளிவாக தெரிகிறது. அதில் தன்னை வளர்த்துக்கொண்டு சிஎஸ்கே அணிக்கு இந்த சீசனில் மிக முக்கிய பங்காற்றி வருகிறார். நிறைய ரன்களை விட்டுக் கொடுக்கிறார். முந்தைய பந்தில் சிக்ஸர் அடிக்கப்பட்டிருந்தாலும், அடுத்த பந்தை எந்த ஒரு அழுத்தமும் இல்லாமல் தெளிவான மனநிலையுடன் வீசி விக்கெட்டுகளையும் எடுக்கிறார். இந்த வகையில் சிஎஸ்கே அணிக்கு சாதகமாக முடிகிறது.

தனக்கு பரீட்சயமில்லாத ஒன்றை வளர்த்துக் கொண்டு இப்படி அணியை டெத் ஓவர்களில் தாங்கி நின்று பந்து வீசுவதில் நன்றாக செயல்பட்டு இருக்கிறார் என்பது பாராட்டுதலுக்கு உரியது. ஆனால் இது போதாது. முக்கியமான போட்டிகளில் கூடுதல் நம்பிக்கை வர வேண்டும் என்றால் இன்னும் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட வேண்டும்.” என்று அறிவுறுத்தியுள்ளார் சுனில் கவாஸ்கர்!.