டீம் மனசு வச்சா.. அடுத்த ஐபிஎல்-ல நான் இருப்பேன் – ஃசாம் கர்ரன் பேட்டி!

0
7960

அடுத்த வருடம் ஐபிஎல் தொடரில் நான் ஆடுவேன் என்று நம்புகிறேன் என சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார் சாம் கர்ரன்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியால் 138 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

- Advertisement -

இங்கிலாந்து அணிக்காக பந்து வீச்சில் அசத்திய சாம் கர்ரன் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த உலக கோப்பை தொடரில் ஏழு போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 11.15 ஆகும். இறுதியில் இங்கிலாந்து வென்று கோப்பையையும் கைப்பற்றியது.

கடந்த ஐபிஎல் தொடரில் அவர் விளையாடவில்லை காயத்தில் இருந்தார். அதன் பிறகு குணமடைந்து டி20 உலக கோப்பை தொடரில் விளையாடிய இங்கிலாந்து அணியில் இடம் பிடித்தார்.

இந்த உலகக்கோப்பை தொடர் அவருக்கு மறக்க முடியாத ஒன்றாக அமைந்துவிட்டது. பந்துவீச்சில் மிக சிறப்பாக செயல்பட்டு தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். மேலும் இறுதிப்போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

- Advertisement -

அப்போது பேசிய அவர், “ஐபிஎல் தொடர் எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்திருக்கிறது. ஐபிஎல் போன்ற மிகப்பெரிய தொடரில் விளையாடியது மனதளவில் நல்ல வலிமையை கொடுத்து இருக்கிறது. மிகப்பெரிய வீரர்களுடன் விளையாடும் பொழுது பல அனுபவங்கள் நமக்கு கிடைக்கும். அதை வைத்து தான் ஒவ்வொரு போட்டியிலும் என்னால் செயல்பட முடிந்தது.

நிச்சயம் வரும் ஐபிஎல் தொடரில் விளையாடுவேன் என்று நம்புகிறேன். இதற்கு அணி நிர்வாகங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.” என்றார்.

உலக கோப்பை இறுதி போட்டியில் விளையாடியது பற்றி பேசிய அவர், “ஆட்டநாயகன் விருது பென் ஸ்டோக்ஸ்க்கு சென்றிருக்க வேண்டும். அவர்தான் இறுதிவரை போராடி வெற்றி பெற்றுக் கொடுத்தார். சரியான லைன் மற்றும் லெந்த் இரண்டிலும் வீசியது எனக்கு உதவிகரமாக இருந்தது.

மேலும் இரு பக்கங்களிலும் பவுண்டரிகள் சிறியது என்பதால் விக்கெட் திசையை நோக்கி மட்டுமே வீசினேன். பைனலில் அணிக்கு பங்களிப்பை கொடுத்தது மகிழ்ச்சிகரமாக இருக்கிறது.” என்று பேசினார்.