சிஎஸ்கே புது கோச்.. ஜாகீர் கான் இதை எப்பவும் செய்யவே மாட்டார்.. அவங்களுக்கு இது தேவைதான் – ஆகாஷ் சோப்ரா பேட்டி

0
0

​ஐபிஎல் 2027 தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமை கோச்சாக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

​கடந்த 2023-ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அதன் பிறகு 2024, 2025 மற்றும் 2026 ஆகிய மூன்று சீசன்களிலும் பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் வெளியேறித் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகிறது.

- Advertisement -

​சென்னை அணியின் நிர்வாக எதிர்பார்ப்புகளையும், ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் பிளேயர்கள் சந்திக்கும் மன அழுத்தத்தையும் நன்கு உணர்ந்த ஒரு தலைவராக ஜாகீர் கான் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

​இதுகுறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசும்போது “நிர்வாகத்தின் எதிர்பார்ப்பையும், பிளேயர்கள் சந்திக்கும் அழுத்தத்தையும் நீங்கள் புரிந்து கொண்டால், உங்களால் மிகச் சிறப்பாக பணியாற்ற முடியும். ஜாகீர் கான் பற்றி எனக்குப் பிடித்த மற்றொரு விஷயம் என்னவென்றால், அவர் பிளேயர்களுக்கு ஆதரவாக நிற்பார், அவர்களை ஆதிக்கம் செலுத்தி அச்சுறுத்தும் நபர் கிடையாது. அவர் சென்னை அணிக்கு மிகச் சரியாகப் பொருந்துவார், ஏனெனில் அவருக்கு கிரிக்கெட்டின் நுணுக்கங்களும், டாக்டிக்ஸ் முறைகளும் நன்றாகத் தெரியும். அதேபோல் சென்னை அணிக்கும் இப்படிப்பட்ட நபர்கள் தான் தற்போது தேவைப்படுகிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​மேலும் ஜாகீர் கானின் அணுகுமுறை குறித்து ஆகாஷ் சோப்ரா தொடர்ந்து பேசும்போது “அவர் எப்போதும் முன்னால் வந்து வெளிச்சத்தைக் கவர மாட்டார், பின்புலத்தில் இருந்து அமைதியாகத் தன் பணிகளைச் செய்யக்கூடியவர். செயல்முறைகளில் மட்டுமே அதிக கவனம் செலுத்துவார். தோனி மற்றும் ஜாகீர் கான் இருவரின் தத்துவங்களும் சிந்தனைகளும் ஒரே மாதிரியானவை என்பதால், இந்த கூட்டணி சென்னை அணிக்கு மிகச் சிறப்பாகச் செயல்படும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -