சமி!ஜடேஜா!அஸ்வின்!அபாரம் 263 ரண்களில் சுருண்ட ஆஸ்திரேலியா !

0
725

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் இன்று துவங்கியது . முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணிக்கு வார்னர் மற்றும் கவாஜா சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தனர் . முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்கு இருவரும் 50 ரன்களை சேர்த்தனர் .

15 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த டேவிட் வார்னர் முஹம்மது சமியின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பரத்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார் . இதனைத் தொடர்ந்து ஆட வந்த லபுசேன் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் அஸ்வினின் பந்துவீச்சில் ஒரே ஓவரில் ஆட்டம் இழந்தனர் .

- Advertisement -

ஒரு முனையில் அபாரமாக ஆடிக்கொண்டிருந்த உஸ்மான் கவாஜா 81 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் கே எல் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார் . அதனைத் தொடர்ந்து ஆட வந்த அலெக்ஸ் கேரியும் அஸ்வின் சுழலில் சிக்கினார் .

ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டு இருந்தாலும் மறுமுனையில் சிறப்பாக ஆடிய பீட்டர் ஹன்ட்ஸ்க்காம் சிறப்பாக ஆடி 72 ரன்கள் உடன் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார் . இவருக்கு துணையாக ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் 33 ரண்களும் லியான் 10 ரண்களும் எடுத்தனர்.

இறுதியாக ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 263 ரண்களுக்கு ஆள் அவுட் ஆனது . இந்திய அணியின் பந்து வீச்சில் முகமது சமீ 4 விக்கெட்டுகளையும் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன் பீட்டர் ஹன்ட்ஸ்க்காம் இறுதிவரை ஆட்டம் இழக்காமல் 72 ரன்கள் உடன் களத்தில் இருந்தார் . இதில் ஒன்பது பவுண்டரிகள் அடங்கும் .

- Advertisement -

இதனைத் தொடர்ந்து ஆடிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 21 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்தது . ரோகித் சர்மா 13 ரன்கள்டனும் கே எல் ராகுல் நான்கு ரன்கள்டனும் களத்தில் இருந்தனர் . டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் நாள் இந்திய அணிக்குமே தொடர்கிறது .