உலக கோப்பை அணியில் புறக்கணிப்பு.. முதல் முறை மௌனம் கலைத்த ஷிகர் தவான்.. என்னா மனுஷன்யா நீ!

0
5283
Shikhar

கடந்த வருடத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக, அந்த உலகக்கோப்பைக்கான தயாரிப்புகளில் இந்திய அணி மும்முரமாக ஈடுபட்டு இருந்தது.

அந்த நேரத்தில் இந்திய டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற வாய்ப்பு இல்லாத ஷிகர் தவானை கேப்டனாக வைத்து ஒருநாள் கிரிக்கெட் தொடர்களை இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் சந்தித்து வந்தது.

- Advertisement -

மேலும் ஷிகர் தவான் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் வடிவத்தில் இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டாலும், ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்பட்டு வந்தது. அவரும் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளுக்கான நியாயத்தை பேட்டிங்கால் செய்து கொண்டு வந்தார்.

இந்த நிலையில் இந்த ஆண்டு இந்தியாவில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பைக்கு நிச்சயம் ஷிகர் தவான் இந்திய அணியில் இடம் பெறுவார் என்று பலரும் நினைத்து இருந்தார்கள். காரணம் அவர் இடதுகை வீரர் மேலும் அனுபவம் உள்ளவர். இது மட்டும் இல்லாமல் ஐசிசி தொடர்களில் எப்பொழுதும் சிறப்பாக செயல்பட கூடியவர்.

இந்த காரணங்களால் ஷிகர் தவான் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் நிச்சயம் இருப்பார் என்று கிரிக்கெட் பெரிய விமர்சகர்களாலேயே கணிக்கப்பட்டார். ஆனால் எல்லோரது கணிப்பையும் தாண்டி அவருக்கு இடம் வழங்கப்படவில்லை.

- Advertisement -

மேலும் ஷிகர் தவானுக்கு இடம் வழங்கப்படாது என்பது கடந்த ஆண்டு இறுதியிலேயே தீர்மானம் ஆகிவிட்டது. அவர் ஒருநாள் இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருந்த பொழுது உள்ளே கொண்டுவரப்பட்ட சுப்மன் கில்லை, அவரது இடத்திற்கே கொண்டு வந்து அதிர்ச்சி படுத்தியது பிசிசிஐ.

இப்படி எதிர்பாராமல் யாரும் ஏமாற்றம் அடையக்கூடிய, விரக்தி அடைய கூடிய செயல்கள் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் தொடர்ந்து நடைபெற்றாலும் கூட, எந்த இடத்திலும் அவர் யாரையும் குறை சொல்லி பேசியதே கிடையாது. எல்லாவற்றையும் நேர்மறையாகவும் மகிழ்ச்சியாகவும் அணுகக் கூடியவராகவே ஷிகர் தவான் இருந்து வருகிறார். தற்பொழுது அறிவிக்கப்பட்ட உலகக்கோப்பை இந்திய அணிக்கான தனது அறிக்கையிலும் அதையே தொடர்ந்து இருக்கிறார்.

உலகக்கோப்பை இந்திய அணிக்கான தனது வாழ்த்துச் செய்தியில் ஷிகர் தவான் கூறும் பொழுது “இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்ட எனது சக தோழர்கள் மற்றும் அணி வீரர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். 1.5 பில்லியன் மக்களின் பிரார்த்தனை மற்றும் ஆதரவுடன், நீங்கள் எங்கள் நம்பிக்கையையும் கனவையும் சுமந்து கொண்டு செல்கிறீர்கள். உலகக்கோப்பையை கொண்டு வந்து, எங்களைப் பெருமைப்படுத்துங்கள்” என்று மிகவும் உற்சாகமாக வாழ்த்தியிருக்கிறார்!