இந்திய அணியின் இளம் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான மானவ் சுத்தாரை, இலங்கை அணி பேட்டர்கள் செட்டிலாக விடாமல் கவுண்டர் அட்டாக் செய்து நெருக்கடி கொடுத்தது குறித்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சட்டேஷ்வர் புஜாரா கருத்து தெரிவித்துள்ளார்.
கொழும்பு டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளில் இலங்கை அணி பேட்டர்கள் மிகவும் புத்திசாலித்தனமாக விளையாடி சுத்தாரின் பந்துவீச்சை எதிர்கொண்டனர். குறிப்பாக அவர்கள் தொடக்கத்திலேயே பவுண்டரிகள் அடித்து அவரை சௌகரியமாக பந்துவீச விடாமல் தடுத்தது போட்டியின் போக்கை சுவாரசியமாக்கியது.
இந்த கடுமையான சூழலிலும் கூட, தேநீர் இடைவேளைக்கு பிறகு மானவ் சுத்தார் தனது பந்துவீச்சில் சில மாற்றங்களை செய்து மீண்டு வந்தார். அவர் பந்தின் நீளத்தையும் லைனையும் மாற்றி அமைத்து விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறமையை நிரூபித்தார்.
இலங்கை பேட்டர்களின் இந்த அதிரடி அணுகுமுறை குறித்து சட்டேஷ்வர் புஜாரா பேசும்போது “இலங்கை பேட்டர்களுக்கு தான் அனைத்து கிரெடிட்டும் சேரும். மானவ் சுத்தார் பந்துவீச வந்த உடனேயே அவர்கள் கவுண்டர் அட்டாக் செய்ய தொடங்கினார்கள். அவரை செட்டில் ஆக விடவில்லை மற்றும் அவர் விரும்பிய இடத்தில் பந்தை லேண்ட் செய்யவும் அனுமதிக்கவில்லை. அவர்கள் சில ஃபண்டாஸ்டிக் ஷாட்களை ஆ டினார்கள், குறிப்பாக பசின்டு தொடர்ந்து ஸ்லாக்-ஸ்வீப் ஷாட்களை ஆ டினார். பிரஷரில் இருக்கும்போது எப்படி மீண்டு வர வேண்டும் என்பதை மானவ் சுத்தார் இதன் மூலம் கற்றுக்கொள்வார்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் சுத்தாரின் கம்பேக் குறித்து தொடர்ந்து பேசிய புஜாரா “மானவ் சுத்தார் இந்த நாளை முடித்த விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. அவர் தனது தவறுகளில் இருந்து பாடங்களை கற்றுக்கொண்டு பந்துவீச்சில் அட்ஜஸ்ட்மென்ட் செய்தார். அவர் பந்தை ஃபுல்லராகவும், சற்று வைடராகவும் வீசினார். லஞ்ச் மற்றும் டீ இடைவேளைக்கு பிறகு அவர் பந்துவீசிய விதத்திற்கும், டீ இடைவேளைக்கு பிறகு பந்துவீசிய விதத்திற்கும் பெரிய வித்தியாசம் இருந்தது. இதில் டீம் மேனேஜ்மென்ட்டின் வழிகாட்டுதலும் நிச்சயம் இருந்திருக்கும்” என்று கூறி முடித்துள்ளார்.