இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளில் கேப்டன் சுப்மன் கில் பிடித்த ஒரு அற்புதமான கேட்ச் ஆட்டத்தின் போக்கையே மாற்றியதாக இந்திய முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பாராட்டியுள்ளார்.
போட்டியில் இலங்கை அணி ஃபாலோ-ஆன் பெற்று இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து வலுவான நிலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது கமிந்து மெண்டிஸ் அடித்த பந்தை பின்னோக்கி ஓடிச் சென்று டைவ் அடித்து கில் பிடித்தார்.
இந்த முக்கியமான பிரேக் த்ரூ மூலம் 115 ரன்கள் சேர்ந்த கூட்டணி உடைக்கப்பட்டு, இந்திய அணி மீண்டும் போட்டிக்குள் கம்பேக் கொடுக்க வழிவகுத்தது.
இந்த கேட்ச் மற்றும் கில்லின் கேப்டன்ஷிப் குறித்து அஜய் ஜடேஜா பேசும்போது “இது ஒரு சிறந்த கேட்ச், அதற்கு மேலாக ஆட்டம் இருந்த சூழ்நிலையை வைத்துப் பார்க்கும்போது இதுவே மேட்ச்சின் டர்னிங் பாயிண்ட் ஆகும். உங்களுக்கு ஏதேனும் இன்ஸ்பிரேஷன் தேவைப்படும் நேரத்தில் கேப்டனே முன்னின்று அதை செய்து காட்டினார். சூழ்நிலை நமக்கு சாதகமாக இல்லாதபோது சுற்றி இருப்பவர்களை இன்ஸ்பயர் செய்வதுதான் ஒரு லீடரின் கடமை, அதை அவர் செய்தார்” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர் “அந்த விக்கெட் மட்டும் விழாமல் போயிருந்தால் போட்டி எந்த நிலைமைக்கு சென்றிருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. அது மிகவும் இம்பார்ட்டன்ட் மொமண்ட், அதை அவர் மிக சிம்பிளாக மாற்றிவிட்டார்” என்று கூறி முடித்துள்ளார்.