விராட் பாயை ஏமாத்திடலாம்.. கில் கூட ஓகே.. ஆனா அந்த விஷயத்துல ரோஹித் பாயை ஏமாற்ற முடியாது – குல்தீப் கருத்து

0
0

​இந்திய அணிக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் இடையே நடைபெறும் ஒருநாள் தொடரில், டிஆர்எஸ் (DRS) முடிவுகள் எடுப்பது குறித்து இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் சுவாரஸ்யமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

​முதல் போட்டியில் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவ், போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்திய முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணிக்கு மிகப்பெரிய பலமாகத் திகழ்ந்தார்.

- Advertisement -

​போட்டியில் எதிரணியின் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தி, திருப்புமுனையாக அமைந்த விக்கெட்டை டிஆர்எஸ் மூலம் பெற்றுக் கொடுத்தது இந்திய அணியின் வெற்றியை மேலும் எளிதாக்கியது.

​போட்டி முடிவடைந்த பிறகு டிஆர்எஸ் எடுப்பது குறித்து குல்தீப் யாதவ் பேசும்போது, “ரிவியூ எடுப்பதில் நான் மிகவும் பலவீனமானவன். கேப்டனை சம்மதிக்க வைப்பது சற்று கடினமானது. விராட் பாயை சம்மதிக்க வைப்பது மிகவும் எளிது”

- Advertisement -

“​என்னால் சுப்மனையும் சில நேரங்களில் சம்மதிக்க வைக்க முடியும். ஆனால் ரோஹித் பாயை சம்மதிக்க வைப்பதுதான் மிகவும் கடினம், எப்போதும் அப்படித்தான் இருந்திருக்கிறது. பந்து பிட்ச் ஆகி ஸ்டம்பில் படும் என்று நினைத்தேன், ஆனால் உயரத்தைப் பற்றி சற்று சந்தேகமாக இருந்தது. நல்லவேளையாக அது நமக்கு சாதகமாக அமைந்து விக்கெட் கிடைத்தது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -