கோலி சச்சின் இல்லை.. தனக்கு பிடித்த 3 பேட்ஸ்மேன்களை தேர்வு செய்த சிக்கந்தர் ராசா.. 1 இந்திய வீரருக்கு இடம்

0
4213

ஜிம்பாப்வே அணியின் நட்சத்திர கிரிக்கெட் ஆட்டக்காரரான சிக்கந்தர் ராசா தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு ட்விட்டர் வலைதளத்தில் பதிலளித்த சிக்கந்தர் ராசா தனக்கு பிடித்த மூன்று பேட்ஸ்மேன்களின் பெயர்களை குறிப்பிட்டார். அதில் ஒருவர் இந்திய வீரராக இருந்த நிலையில் அது விராட் கோலி இல்லாமல் வேறு ஒரு வீரரை தேர்வு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஜிம்பாப்வே அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான 38 வயது சிக்கந்தர் ராசா 1986ஆம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள சியால்கோட்டில் பிறந்தார். பிறப்பால் ஒரு பாகிஸ்தானியராக இருந்தாலும் 2013ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். தனது சிறப்பான பேட்டிங் மற்றும் பந்து வீச்சின் மூலம் ஜிம்பாப்வே அணிக்காக பல போட்டிகளை வென்று கொடுத்திருக்கிறார்.

ஜிம்பாப்வே அணியில் இவரது திறமையை அறிந்த ஐபிஎல் அணியான பஞ்சாப் கிங்ஸ் லெவன் இவருக்கு வாய்ப்பு கொடுத்தது. ஐபிஎல் தொடரிலும் ஓரளவு சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்த நிலையில், தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 100 பந்துகள் கொண்ட தொடரில் மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு சுவாரசியமான பதில்களை அளித்து வந்த சிக்கந்தர்ராசா, அப்போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு பிடித்த பேட்ஸ்மேன் அல்லது பந்துவீச்சாளர் யார்? என்ற கேள்வியை கேட்டார்.

- Advertisement -

அந்தக் கேள்விக்கு பதில் அளித்த ராசா தனக்குப் பிடித்த பேட்ஸ்மேன்களாக பாகிஸ்தான் வீரரான அப்துல்லா ஷபிக், ஜிம்பாப்வே வீரரான கிரெய்க் எர்வின் மற்றும் இந்தியாவின் ரோகித் சர்மா ஆகியோரை தேர்வு செய்தார். பிடித்த பந்துவீச்சாளர்களாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுனில் நரேன், இந்தியாவின் பும்ரா மற்றும் பாகிஸ்தான் அணியின் அப்ரிடி ஆகியோரை தேர்வு செய்தார்.

இதில் பேட்ஸ்மேன்களில் நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரரான விராட் கோலி மற்றும் கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரை அவர் தேர்வு செய்யவில்லை. மாறாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை தேர்வு செய்திருக்கிறார். இது கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க:ரோகித் சுயநலமில்லாமல் ஆட தேவையில்லை.. அப்படிப்பட்ட ஒரு வேலையை ஏன் செய்யணும்? – சல்மான் பட் கேள்வி

இருப்பினும் விராட் கோலியை போலவே நவீன காலத்தில் சம பலம் வாய்ந்த வீரராக ரோஹித் சர்மா இருக்கிறார். மேலும் இந்திய அணியின் கேப்டன் ஆனதிலிருந்து தனது சொந்த ரெக்கார்டுகளுக்காக பேட்டிங் செய்யாமல் அணியின் நலன் கருதி முதல் பந்தில் இருந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இது அவருக்கு பின்னால் இறங்கும் வீரர்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லாமல் எளிமையாக பேட்டிங் செய்ய உதவுகிறது.

- Advertisement -