எங்க எல்லாருக்கும் அந்த பிரச்சனை வந்துச்சு.. ஆனா தோனிக்கு வரல.. முன்பே சரி செய்தார் – ஜாகிர் கான் பேச்சு

0
253
Dhoni

இந்திய கிரிக்கெட்டில் சவுரவ் கங்குலியால் அடையாளம் காணப்பட்டவர்களில் மிகவும் முக்கியமானவர் ஜாகிர் கான். ஏனென்றால் உலக கிரிக்கெட்டில் இந்திய அணியில் பெரிய வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்ததில்லை. இது இந்திய அணிக்கு நீண்ட கால குறையாகவே இருந்து வந்திருக்கிறது.

இப்படியான சூழ்நிலையில் பல ஆண்டுகள் தனியாகப் போராடும் அளவுக்கு வேகப்பந்து வீச்சில் திறமை படைத்த ஜாகிர் கான் சவுரவ் கங்குலி கேப்டனாக இருந்த காலத்தில் இந்திய அணிக்குள் கொண்டுவரப்பட்டார். மேலும் இடதுகை வேகப் பந்துவீச்சாளராக இருந்ததால், பல வகைகளில் அவர் முக்கியமானவராக இந்திய பந்துவீச்சு யூனிட்டில் மாறினார்.

- Advertisement -

ஸ்விங் கிங் என்று புகழப்படும் இங்கிலாந்தின் ஆண்டர்சனே ரிவர்ஸ் ஸ்விங் பந்துவீச்சை கலையை ஜாகிர் கான் இடம் இருந்து கற்றுக் கொண்டதாக கடைசியாக இந்தியா வந்திருந்த பொழுது வெளிப்படையாக தெரிவித்தார். முழுமையான வேகப்பந்துவீச்சாளராக இந்திய கிரிக்கெட்டின் முதன்மை பந்துவீச்சாளராக இப்பொழுதும் ஜாகீர் கான்தான் புள்ளி விபரங்கள் அடிப்படையிலும் திறமை அடிப்படையில் இருக்கிறார்.

சவுரவ் கங்குலி காலத்தில் அறியப்பட்டிருந்தாலும், மகேந்திர சிங் தோனி கேப்டன்சி காலத்தில்தான் நீண்ட காலம் ஜாகிர் கானின் கிரிக்கெட் பயணம் அமைந்திருக்கிறது. இதனால் மகேந்திர சிங் தோனி உடன் அதிக நேரம் சர்வதேச கிரிக்கெட்டில் செலவு செய்தவராகவும் ஜாகிர் கான் இருக்கிறார். 2011 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் போது இந்திய பந்துவீச்சு யூனிட்டின் சச்சின் ஜாகிர் கான் என்று தோனி புகழ்ந்து கூறியிருந்தார்.

தோனிக்கு அந்த புரிதல் இருந்தது

இந்த நிலையில் உலக கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய ஓய்வு பெற்ற எல்லா வீரர்களுக்கும் ஏற்பட்ட ஒரு முக்கியமான பிரச்சனை, மகேந்திர சிங் தோனிக்கு ஏன் ஏற்படவில்லை? அவருக்கு அது குறித்து எப்படியான புரிதல் இருந்தது என்று ஜாகிர் கான் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து ஜாகிர் கான் கூறும் பொழுது “நீங்கள் விளையாடும் காலத்திலேயே, விளையாட்டை விட்டு வெளியேவும் இருப்பது முக்கியமானது. உலகின் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு, அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்திருக்கிறது. காரணம் அவர்கள் தங்கள் விளையாட்டுக்காக எல்லாவற்றையும் கொடுத்திருப்பார்கள். அவர்கள் வேறு எதிலும் கவனம் செலுத்தி இருக்க மாட்டார்கள்.

இதையும் படிங்க : பும்ராவை விட பெஸ்ட்டா வருவேன்.. சவால் விட்ட 17 வயது பையனை வாங்கிய மும்பை இந்தியன்ஸ்

ஆனால் மகேந்திர சிங் தோனியை எடுத்துக் கொண்டால் அவருக்கு கிரிக்கெட் மீது மிகப்பெரிய ஆர்வமும் விருப்பமும் இருந்தது. ஆனால் கிரிக்கெட் முக்கியம் என்று தெரிந்தால் கூட, கிரிக்கெட்டே மொத்த வாழ்க்கையும் கிடையாது என்று அவர் உணர்ந்து இருந்தார். உதாரணமாக எடுத்துக் கொண்டால் அவருக்கு பைக்குகள் மீது பெரிய காதல் இருக்கிறது. அது குறித்து அவர் ஏதாவது ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பார். அவர் விளையாடும் காலகட்டத்திலேயே, விளையாட்டுக்கு வெளியில் ஏதாவது செய்யக் கூடியவராக இருந்தார்” என்று கூறியிருக்கிறார்.