என்னுடைய கனவு ஹாட்ரிக்கில் இந்த 3 வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்த விரும்புகிறேன் – சாஹல் விருப்பம்

0
1862
Yuzvendra Chahal RR

நடப்பு ஐ.பி.எல் பதினைந்தாவது சீசன் இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன்கள் விராட்கோலி, ரோகித் சர்மாவுக்கும், நட்சத்திர அணிகள் சென்னை, மும்பைக்கு சரிவை தந்திருக்கிறது. இன்னொரு புறத்தில் இளம் இந்திய புதிய வீரர்களின் திறமைகள் வெளிப்பட்டிருக்கிறது. இதுபோல மூத்த இந்திய வீரர்கள் சிலரும் அதிரடியாய் எழுச்சி பெற்றிருக்கிறார்கள். இந்த வகையில் யுஸ்வேந்திர சஹல் முக்கியமானவர் !

2021ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேடில் நடைபெற்ற இருபது ஓவர் உலகக்கோப்பை இந்திய அணியில், யுஸ்வேந்திர சஹல் கழட்டி விடப்பட்டு ராகுல் சஹர் சேர்க்கப்பட்டார். இதற்குக் காரணமாக, ராகுல் சஹர் கொஞ்சம் வேகமாக வீசுவது என்று இந்திய தேர்வாளர்களால் கூறப்பட்டது.

- Advertisement -

2022 ஐ.பி.எல் மெகா ஏலத்திற்கு முன்பும் யுஸ்வேந்திர சஹலை பெங்களூர் அணி நிர்வாகம் ஏலத்தில் எடுக்கவில்லை. அவருக்குப் பதிலாக இலங்கையில் ஹசரங்காவை பத்து கோடி தாண்டி எடுத்தது. யுஸ்வேந்திர சஹலை ஆறு கோடி அளவில் கொடுத்து மும்பையோடு போட்டியிட்டு ராஜஸ்தான் அணி வாங்கியது. ஏலத்திற்கு முன் தனக்கு எட்டு கோடி வரை கிடைத்தால் நல்லது என்று யுஸ்வேந்திர சஹல் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மெகா ஏலத்திலிருந்து ராஜஸ்தான் அணிக்கு வந்த யுஸ்வேந்திர சஹலின் செயல்பாடு, பெங்களூர் அணியை அவரைத் தக்க வைக்காமல் விட்டதிற்கு வருத்தப்பட வைக்கும் அளவில் மிகச் சிறப்பாக இருக்கிறது. ராஜஸ்தான் அணி எப்போதெல்லாம் இக்கட்டில் இருக்கறதோ அப்பொழுதெல்லாம் இவரிடமிருந்து விக்கெட்டுகள் வருகிறது. லக்னோ அணியுடனான நேற்று நடந்த மிக முக்கியமான ஆட்டத்தில், பேட்டிங்கில் ராஜஸ்தான் அணியை அச்சுறுத்துக்கொண்டிருந்த தீபக் ஹூடாவை சஹல்தான் வெளியேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இவர் தன் கனவு ஹாட்ரிக் விக்கெட்டை பற்றி கூறியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, இந்நாள் கேப்டன் ரோகித் சர்மா, கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட செளத் ஆப்பிரிக்க பிரபல வீரர் 360 டிகிரி ஏ.பி.டிவிலியர்ஸ் ஆகியோரை குறிப்பிட்டுள்ளார். இவர் இந்தத் தொடரில் 13 ஆட்டங்களில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதில் கொல்கத்தா அணியுடன் நடந்த போட்டியில் ஐந்து விக்கெட்டுகளோடு, ஸ்ரேயாஷ் சிவம் மாவி, கம்மின்ஸ் ஆகியோரை ஹாட்ரிக் விக்கெட்டாக வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது !

- Advertisement -