இந்திய கிரிக்கெட்

விராட் கூட கிடையாது.. இங்கிலாந்துல நான் பார்த்த பெஸ்ட் பேட்டிங் கில்தான் – யுவராஜ் சேவாக் பாராட்டு

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் கில் 269 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். இதற்கு இந்திய முன்னாள் வீரர்கள் யுவராஜ் சிங் மற்றும் வீரேந்தர் சேவாக் பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள்.

- Advertisement -

இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்திருந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவும் விளையாடாததால் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடி கேப்டன் வில்லுக்கு மிக அதிகமாக இருந்தது. இந்த நிலையில் மிகச் சிறப்பாக விளையாடிய அணியை நல்ல நிலைக்கு கொண்டு வைத்திருக்கிறார்.

கில் படைத்த சாதனைகள்

நேற்று போட்டியின் இரண்டாவது நாளில் நிலைத்து நின்று விளையாடிய இந்திய கேப்டன் கில் 387 பந்துகளில் 30 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 269 ரன்கள் குவித்து வெளியேறினார். இதன் மூலம் சேனா நாடுகளில் இரட்டை சதம் அடித்த முதல் ஆசிய கேப்டன் என்கின்ற பிரம்மாண்ட சாதனையை படைத்தார்.

இதைத் தொடர்ந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய கேப்டனாக ஒரு இன்னிங்ஸில் அதிக ரன் அடித்தவராகவும், இந்திய பேட்ஸ்மேனாக வெளிநாடுகளில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன் எடுத்தவராகவும் விராட் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் சாதனைகளை முறியடித்தார். இந்த வகையில் இந்த இரட்டை சதம் கில்லுக்கு பல பெருமைகளை கொண்டு வந்திருக்கிறது.

- Advertisement -

நான் பார்த்ததில் சிறந்தது

இதுகுறித்து யுவராஜ் சிங் கூறும் பொழுது “கில் இரட்டை சதம் எந்த குறைபாடும் இல்லாதது. இது ஒரு முழுமையான மாஸ்டர் கிளாஸ். எந்த சகாப்தத்திலும் நான் இங்கிலாந்தில் பார்த்த இன்னிங்ஸ்களில் சிறந்தது. கடந்த சில மாதங்களில் பேட்டிங்கில் கில் பெரிய முன்னேற்றம் அடைந்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய இடம் துவக்க வீரர் இல்லை. இந்த டெஸ்டில் இந்தியா வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : 269 ரன்கள்.. கம்பீர் பாய் சொன்ன அந்த ஒற்றை வார்த்தைதான் காரணம்.. இந்திய கேப்டன் நெகிழ்ச்சி பேட்டி

இதுகுறித்து வீரேந்தர் சேவாக் கூறும்பொழுது “கில்லின் மிகச் சிறந்த இரட்டை சதம். மிகுந்த முதிர்ச்சி, பொறுமை மற்றும் திறமை கொண்ட இன்னிங்ஸ்” என்று பாராட்டி கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts