கடைசி நேரத்துல இதை மட்டும் செய்யாதீங்க.. 2027 WCக்கு முன்பே இந்திய அணிக்கு யுவராஜ் சிங் கொடுத்த முக்கிய அட்வைஸ்

0
0

2027-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பையை குறிவைத்து இந்திய அணி இப்போதே தயாராகி வருகிறது. இதற்கிடையில் அணியில் தொடர்ந்து மாற்றங்கள் செய்வதைவிட, ஒரு குறிப்பிட்ட வீரர்கள் குழுவைத் தேர்வு செய்து அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பது முக்கியம் என்ற விவாதம் எழுந்துள்ளது. இந்த சூழலில் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், உலகக்கோப்பை தயாரிப்பு குறித்து முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, உலகக்கோப்பை நெருங்கும் நேரத்தில் அணியில் மிகப்பெரிய மாற்றங்களை செய்வது வீரர்களின் நம்பிக்கையையும் அணியின் ஒருங்கிணைப்பையும் பாதிக்கலாம் என்பதுதான் யுவராஜின் கருத்தாக உள்ளது. தற்போது ஒருநாள் போட்டிகள் குறைவாக நடைபெறுவதால், தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு போதுமான போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் 16 முதல் 20 வீரர்களை கொண்ட ஒரு முக்கிய குழுவை முன்கூட்டியே உருவாக்கி, அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து யுவராஜ் சிங் கூறுகையில், “உலகக்கோப்பைக்கு முன்பு மிகப்பெரிய மாற்றங்களை செய்யக்கூடாது. ஒரு அணியை உருவாக்கி, அவர்களுடன் தொடர்ந்து நிற்க வேண்டும். அவர்கள் வெற்றி பெற்றாலும் சரி, தோல்வியடைந்தாலும் சரி, அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க வேண்டும். கடைசி நேரத்தில் மாற்றங்களை செய்வது இந்திய அணிக்கு கடந்த காலங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -