ஐபிஎல் 2024

கோலியின் வெற்றிக்கு உண்மையான காரணம் இதுதான்.. யாரும் சொல்லாத விஷயத்தை சொன்ன யுவராஜ் சிங்

தற்போது 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒன்றாம் தேதி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் என இருநாடுகளில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கு அம்பாசிடராக யுவராஜ் சிங் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் விராட் கோலி குறித்து பல விஷயங்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

நடக்க இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணியில் விராட் கோலியின் பெயர் இடம் பெற்று இருக்கிறது. மேலும் அவர் எந்த இடத்தில் விளையாடுவார் என்பது இந்திய அணியில் பெரிய சுவாரசியமான விஷயமாக இருந்து வருகிறது. அவர் விளையாடும் இடத்தைப் பொறுத்தே பிளேயிங் லெவன் தீர்மானிக்கப்படும்.

இந்த நிலையில் விராட் கோலி பற்றி பேசி இருக்கும் யுவராஜ் சிங் கூறும் பொழுது ” இந்த தலைமுறையின் மிகச்சிறந்த வீரர் விராட் கோலி. மேலும் அவர் எல்லா கிரிக்கெட் வடிவங்களிலும் சிறந்தவர். அவரிடம் தற்போது ஒரு உலகக் கோப்பை மெடல் இருக்கிறது. ஆனால் என்னை பொறுத்தவரை அவருக்கு அது மிகவும் குறைவானது. அவர் மேலும் உலகக்கோப்பை மெடல்களுக்கு மிகவும் தகுதியான வீரர்.

அவர் கடைசி வரை களத்தில் இருந்தால் ஆட்டத்தை இந்தியாவுக்கு முடிக்கப் போகிறார் என்று அர்த்தம். பல போட்டிகளில் குறிப்பாக பெரிய போட்டியில் டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மொகாலியில் அதைச் செய்தார். அவருக்கு உள்நாட்டு சூழ்நிலை மற்றும் எந்த பந்துவீச்சாளரை தாக்க வேண்டும், யாரை விட்டு தாக்க வேண்டும் என்பது குறித்து எல்லாம் மிகத் தெளிவாக தெரியும்.

- Advertisement -

அப்பொழுது அவர் தனது வாழ்வின் சிறந்த பார்மில் இருந்தார். அவர் நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக பந்தை அடித்தார். அந்தக் குறிப்பிட்ட போட்டியில் நான் அவருடன் ஒரு சிறிய பார்ட்னர்ஷிப்பில் ஈடுபட்டேன். பிறகு அவர் தோனியுடன் விளையாடி ஆட்டத்தை முடித்து இந்தியாவை வெல்ல வைத்தார்.

இதையும் படிங்க : ஒரு விஷயம் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.. அபிஷேக் இந்திய கிரிக்கெட்டுக்கு பெரிய ஆள் – டிராவிஸ் ஹெட் பேச்சு

விராட் கோலி வலைப்பயிற்சி செய்வது எப்பொழுதும் வித்தியாசமானது. அவர் வலையில் பயிற்சி செய்யும் பொழுது ஒவ்வொரு பந்தையும் அடிக்க வேண்டும் என்று அடிக்க மாட்டார். மாறாக ஒரு போட்டியில் ஒவ்வொரு பந்துக்கும் எப்படி மதிப்பு கொடுத்து விளையாடுவாரோ, அதேபோல்தான் வலையிலும் விளையாடுவார். மேலும் இதை எப்பொழுதும் மாற்றிக் கொள்ளாமல் திரும்பத் திரும்ப தொடர்ந்து வலையில் செய்து கொண்டே இருப்பார். பல வீரர்களிடம் நான் இதை பார்த்தது கிடையாது. இதுதான் அவருடைய வெற்றிக்கு முக்கிய காரணம் என்று நினைக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.

Published by