முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோர் சட்டவிரோத பேட்டிங் ஆப்பில் விளம்பரத்தில் தோன்றியதற்காக
ED விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளனர்.உத்தப்பா திங்கட்கிழமை அன்று டெல்லியில் உள்ள ED தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும். மறுநாள், செப்டம்பர் 23 அன்று யுவராஜ் சிங் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.
இந்த விசாரணைக்கு முன்னதாக, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான ஷிகர் தவான் மற்றும் சுரேஷ் ரெய்னாவின் வாக்குமூலங்களை ED பதிவு செய்துள்ளது.அதிகாரிகளின் தகவலின் படி, 1xBet வழக்கு பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விதி மீறல்களை உள்ளடக்கியது.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட இந்த தளத்துடன் தொடர்புடைய நிதி பரிவர்த்தனைகள் மீது விசாரணை கவனம் செலுத்துகிறது.“பிராண்டை விளம்பரப்படுத்திய பிரபலங்களின் விளம்பர நடவடிக்கைகள் மற்றும் நிதி ஆதாரங்கள், ஆப்பின் பணப்புழக்கத்தை உறுதிப்படுத்துவதில் முக்கியமானவை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2007 ஆம் ஆண்டு முதல் டி20 உலகக் கோப்பையில் இந்தியா வெற்றி பெற உதவிய முக்கிய வீரர்களான யுவராஜ் மற்றும் உத்தப்பா ஆகியோர் இந்த பெட்டிங் ஆப்பிற்கு விளம்பர வீடியோக்களில் தோன்றியுள்ளனர். இருவரும் PMLA-வின் கீழ் தங்கள் வாக்குமூலங்களை பதிவு செய்ய வேண்டும்.யுவராஜ் சிங் அக்டோபர் 2000 இல் கென்யாவுக்கு எதிராக தனது சர்வதேச அறிமுகத்தை மேற்கொண்டார்.
அவர் 40 டெஸ்ட், 304 ஒருநாள் போட்டிகள் மற்றும் 58 T20I போட்டிகளில் விளையாடியுள்ளார். 2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியா வெற்றி பெற்றபோது தொடரின் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று வடிவங்களிலும் அவர் மொத்தம் 11,778 ரன்கள் மற்றும் 148 விக்கெட்டுகளைப் பெற்றார்.
இதையும் படிங்க: பாகிஸ்தான் ஒரு டீமே கிடையாது.. இந்தியா ஆப்கான் மேட்ச் கூட பாப்பேன்.. இத பார்க்க மாட்டேன் – கங்குலி பேச்சு
மறுபுறம், உத்தப்பா 46 ஒருநாள் போட்டிகளிலும் 13 சர்வதேச டி20 போட்டிகளிலும் விளையாடி, முறையே 934 மற்றும் 249 ரன்கள் எடுத்துள்ளார்.
உத்தப்பா இந்தியன் பிரீமியர் லீக்கில் குறிப்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் , சிஎஸ்கே ஆகிய அணியில் நம்பகமான பேட்ஸ்மேனாக மாறினார். 39 வயதான உத்தப்பா தற்போது கிரிக்கெட் வல்லுனராக பணிபுரிந்துள்ளனர்.