தோனிக்கு 2019 உலகக்கோப்பை வாய்ப்பு கிடைக்க காரணம் இது தான் ஆனால் எங்களுக்கு அது கிடைக்கவில்லை – யுவராஜ் சிங்

0
244
Yuvraj Dhoni Cricket

2007ஆம் ஆண்டு நடந்த ஐசிசி உலகக் கோப்பை டி20 தொடரில் நட்சத்திர வீரராகவும், 2011ஆம் ஆண்டு நடந்த ஐசிசி உலக கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருது சொந்தக்காரராக வலம் வந்தவர் யுவராஜ் சிங். 2014ஆம் ஆண்டு நடந்த ஐசிசி உலகக் கோப்பை டி20 தொடரின் இறுதிப்போட்டியில் அனைத்து இந்திய ரசிகர்களுக்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தை யுவராஜ் கொடுத்தார்.

இறுதிப் போட்டியில் இலங்கை அணியிடம் இந்திய அணி தோல்வி பெற்றது. அந்த இறுதி போட்டியில் யுவராஜ் சிங் மிக சுமாராக விளையாடினார். 21 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே அன்று அவர் குவித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அந்த போட்டியில் யுவராஜ் சிங் கடைசி நேரத்தில் சற்று அதிரடியாக விளையாடி இருந்தால் நிச்சயமாக இந்திய அணி இன்னும் சற்று ரன்கள் குவித்திருக்கும். அவர் அன்று அதிரடியாக விளையாட காரணத்தினாலேயே இந்திய அணி தோல்வியடைந்தது என்று ரசிகர்கள் ஒரு பக்கம் அவரை தற்போது வரை குறை கூறி வந்த வண்ணம் இருக்கின்றனர்.

மௌனத்தை கலைத்த யுவராஜ் சிங்

சமீபத்தில் நடந்த ஒரு உரையாடலில் 2014 ஆம் ஆண்டு நடந்த ஐசிசி உலக கோப்பை டி20 தொடரின் இறுதிப்போட்டியில் தான் விளையாடிய விதம் குறித்து பேசியிருக்கிறார்.இறுதிப்போட்டியில் என்னால் பந்துகளை நான் நினைத்தவாறு அடிக்க முடியவில்லை. குறிப்பாக ஆப் ஸ்பின் பந்து வீச்சாளர்களின் பந்துகளை அடிக்க முயற்சிக்கையில் நான் நினைத்த படி என்னால் அடிக்க முடியவில்லை. அதன் காரணமாகவே நிறைய டாட் பந்துகள் வந்தது. ஒரு கட்டத்தில் நான் அவுட்டாக முயற்சித்தேன். என்னால் அவுட்டாகவும் முடியவில்லை.

அந்தப் போட்டிக்கு பின்னர் என்னுடைய கேரியர் முடிந்து விட்டது என்று அனைவரும் நினைத்தார்கள். நான் கூட அதை தான் நினைத்தேன். ஆனால் இதுதான் வாழ்க்கை. வெற்றிகளையும் புகழையும் ஏற்றுக் கொள்ளும் நாம் தோல்விகளையும் ஏற்றுக் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும். நம் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் நாம் முன்னேறிச் செல்லவேண்டும் என்று யுவராஜ் சிங் தற்போது பேட்டியளித்துள்ளார்.

- Advertisement -

அந்த விஷயத்தில் மகேந்திர சிங் தோனி போன்ற வீரர்கள் பாக்கியசாலிகள்

2011ஆம் ஆண்டுக்குப் பின்னர் காலம் வேறு பாதையில் பயணிக்கிறது. அப்பொழுது இந்திய அணியின் சீனியர் வீரர்களான ஹர்பஜன்சிங், விரேந்திர சேவாக், விவிஎஸ் லட்சுமணன் மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோருக்கு இந்திய நிர்வாகத்திடமிருந்து உறுதுணையும் ஆதரவும் கிடைக்கவில்லை. அந்த வகையில் மகேந்திர சிங் தோனிக்கு நிறைய ஆதரவு கிடைத்தது.

விராட் கோலி மற்றும் ரவிசாஸ்திரி அடங்கிய இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மகேந்திர சிங் தோனிக்கு நிறைய ஆதரவு கொடுத்தனர். அவர்கள் மகேந்திர சிங் தோனியை 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் விளையாட வைத்தனர். மேலும் மகேந்திர சிங் தோனி 350 வது சர்வதேச போட்டியிலும் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் விளையாட்டைப் பொறுத்த வரையில் ஒரு வீரருக்கு ஆதரவு நிச்சயமாக இருந்தாக வேண்டும். அவருக்கு உறுதுணையாக கிரிக்கெட் நிர்வாகம் நடந்துகொள்ள வேண்டும். தலைக்குமேல் கோடாரி தொங்கிக் கொண்டிருக்கும் பொழுது, எந்த ஒரு கிரிக்கெட் வீரராலும் கவனம் செலுத்தி சிறப்பாக விளையாட முடியாது. இதை ஒரு சாக்காக நான் சொல்லவில்லை என்றாலும், ஒரு கிரிக்கெட் வீரருக்கு உறுதுணையும் ஆதரவும் நிச்சயம் இருந்தாகவேண்டும். அந்த விஷயத்தில் மகேந்திர சிங் தோனி போன்ற வீரர்கள் பாக்கியசாலிகள் என்று யுவராஜ் சிங் தற்போது கூறியுள்ளார்.