கிரிக்கெட்

நீ உன் தந்தையைப் போல் ஆட்டோ ஓட்ட தான் லாய்க்கு – இது போன்ற விமர்சனங்கள் தன்னை எவ்வளவு பாதித்தது குறித்து சிராஜ் வெளிப்படைப் பேச்சு

இந்திய அணியில் விளையாடிய, தற்பொழுது விளையாடிக் கொண்டிருக்கின்றன கிரிக்கெட் வீரர்களில் ஒரு சிலர் மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவர்கள். அதிலும் குறிப்பாக முகமது சிராஜ் மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவர்.

- Advertisement -

முகம்மது சிராஜின் தந்தை ஆட்டோ ரிக்ஷா ஓட்டும் அன்றாட உழைப்பாளி. அவரது வருமானத்தில் ஒரு சாதாரண ஏழை குடும்பத்தில் இருந்து தனது கடின உழைப்பால், இன்று இந்திய கிரிக்கெட் அணியில் தவிர்க்க முடியாத வேக பந்துவீச்சாளராக முகமது சிராஜ் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

முகமது சிராஜ் மீது விராட்கோலி வைத்த நம்பிக்கை

முகமது சிராஜ் ஐபிஎல் தொடர் மூலம் நிறைய பேருக்கு பரிச்சயமானார். 2017 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அவர் விளையாடத் தொடங்கினார். பின்னர் பெங்களூரு அணி அவரை கைப்பற்றியது.பெங்களூரு அணியில் ஆரம்ப காலகட்டத்தில் முகமது சிராஜ் எந்த அளவுக்கு விமர்சனத்தை எதிர் கொண்டார் என்பதை நாம் மறந்துவிட முடியாது.

ஆரம்பத்தில் அவரது ஓவர்களில் அதிரடி பேட்ஸ்மேன்களில் நிறைய ரன்கள் குவித்த பொழுதில், பெங்களூரு அணி ரசிகர்களே இவரை திட்டித் தீர்த்து இருக்கின்றனர். ஆனால் முகமது சிராஜ் மீது நம்பிக்கை வைத்து அவருடைய திறமையை வெளிக்கொண்டுவர விராட் கோலி நிறைய வாய்ப்புகளை அவருக்கு வழங்கிக் கொண்டே வந்தார்.

- Advertisement -

அதன் பலனாக இன்று ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளராக இந்திய அணியில் முகம்மது சிராஜ் ஜொலித்து கொண்டிருக்கிறார் என்று சொன்னால் மிகையாகாது. தற்பொழுது இந்திய அணியின் டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் என அனைத்துவித பாமெட்டிலும் முகமது சிராஜ் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முகமது சிராஜ் எதிர்கொண்ட விமர்சனம்

2020-21ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரை மிக அற்புதமாக விளையாடிய கைப்பற்றியது. ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ச்சியாக இந்திய அணி 2-வது டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனையும் படைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் வரலாற்றுச் சாதனையை ஒரு ஆவணப்படமாக சோனி பிக்சர்ஸ் தற்பொழுது டவுன் அண்டர் டாக்ஸ் என்கிற தலைப்பில் வெளியிட்டுள்ளது. அதில் முகமது சிராஜ் தன்மீது வந்தது விமர்சனத்தையும் அதிலிருந்துதான் எப்படி மீண்டு வந்தார் என்பதையும் எடுத்துக் கூறியுள்ளார்.

2018 ஆம் ஆண்டு நான் நிறைய விமர்சனனங்களை எதிர்கொண்டேன். நிறைய பேர் என்னுடைய குடும்ப சூழ்நிலையை ஒப்பிட்டு என்னை கஷ்டப் படுத்தினார்கள். நீ உன் தந்தையைப் போன்று ஆட்டோ ரிக்ஷா ஓட்ட தான் லாயக்கு உனக்கு கிரிக்கெட் எல்லாம் அவசியமில்லாத ஒன்று என்பதுபோல் என்னை காயப்படுத்தினார்கள். நான் அவற்றையெல்லாம் கடந்து என்னுடைய விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்தினேன்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2020-21 ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் தொடரில் இந்திய பந்துவீச்சாளர்கள் மத்தியில் சிராஜ் அதிகபட்சமாக 13 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். குறிப்பாக தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் இறுதி போட்டியில் முகமது சிராஜ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி ( ஃபைவ் விக்கெட் ஹால் ) அசத்தினார்.

இறுதிப் போட்டி நடந்த காபா மைதானத்தில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி நான் எனது அறைக்கு செல்லும் வேளையில், பந்தை உயர்த்தி நான் ஆனந்தமாக நடந்த அந்த தருணம் எனது கனவு எண்ணினேன். அந்தத் தருணத்தை எப்பொழுதும் எனது வாழ்நாளில் என்னால் மறந்துவிட முடியாது என்று மகிழ்ச்சி பொங்க முகமது சிராஜ் அந்த ஆவணப்படத்தின் கூறியுள்ளார்.

Published by