டி20 உலகக் கோப்பை 2024

டி20 உலககோப்பை.. நியூசிலாந்து அணி அறிவிப்பு.. அனுபவ வீரர்கள் படை.. புது ரூட்டில் கோப்பைக்கு குறி

இந்தியாவில் ஐபிஎல் தொடர் மே மாத இறுதியில் முடிவடைகிறது. இதற்கு அடுத்து உடனே ஜூன் மாதம் ஆரம்பத்தில் வெஸ்ட் இண்டிஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறுகிறது. தற்பொழுது இதற்கு 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

நடக்க இருக்கும் டி20 உலக கோப்பைக்கு ஆணியை அறிவிப்பதற்கான கடைசி நாளாக மே ஒன்றாம் தேதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஐசிசி இடம் மே ஒன்றாம் தேதிக்குள் 20 நாடுகளும் தங்களது அணியை கொடுத்து விட வேண்டும். பிறகு மே இருவத்தி ஆறாம் தேதி வரையில் அதில் ஏதாவது மாற்றங்கள் தேவைப்பட்டால் செய்து கொள்ளலாம்.

இந்த நிலையில் முதல் அணியாக நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அணிக்கு கேன் வில்லியம்சன் கேப்டனாக கொண்டுவரப்பட்டிருக்கிறார். மேலும் அறிவிக்கப்பட்ட அணியில் இருக்கும் ஏறக்குறைய இரண்டு பேர் தவிர எல்லோருமே அனுபவ வீரர்கள் ஆகவே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டி20 உலக கோப்பையை பொறுத்த வரையில் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் அணியில் மேட் ஹென்றி மற்றும் ரச்சின் ரவீந்தரா இருவர் மட்டுமே இந்த உலகக் கோப்பை வடிவத்திற்கு புதியவர்களாக இருக்கிறார்கள். மீதி அனைவருமே ஏற்கனவே டி20 உலகக் கோப்பை அனுபவம் பெற்றவர்களாக இருப்பது அந்த அணியின் பெரிய பலமாக அமைகிறது.

- Advertisement -

தொடக்க இடத்திற்கு பின் ஆலன் மற்றும் டெவோன் கான்வே வருகிறார்கள். அனுபவ பந்துவீச்சாளர்கள் பிம் சவுதி மற்றும் டிரண்ட் போல்ட் ஆகியோரும், சுழல் பந்துவீச்சிக்கு சான்ட்னர் மற்றும் சோதி ஆகியோரும் இருக்கிறார்கள். மேலும் மிடில் வரிசைக்கு டேரில் மிட்சல் பலம் சேர்க்கிறார்.

இதையும் படிங்க : பேபி பிறக்கப் போகுது.. மேட்சை சீக்கிரம் முடிங்க.. சிஎஸ்கேக்கு தோனியின் மனைவி வைத்த கோரிக்கை

டி20 உலகக்கோப்பைக்கு அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி :

கேன் வில்லியம்சன் (கே), ஃபின் ஆலன், டிரென்ட் போல்ட், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, லாக்கி பெர்குசன், மாட் ஹென்றி, டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி மற்றும் டிம் சவுதி.

Published by