“மேக்ஸ்வெல் இருந்திருந்தால் இந்த கப்பும் உங்களுக்கு இல்ல!” – ஆஸி சைமன் கேடிச் பரபரப்பு பேச்சு!

0
2704
Katich

இந்திய அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றி இருக்கிறது. இந்த முறை இந்தியாவில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் நான்கு போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்திய அணி மூன்று போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றி இருக்கிறது.

இந்தத் தொடர் முழுக்க போட்டியின் இரண்டாம் பகுதியில் பனிப்பொழிவு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருந்து வருகிறது. இதன் காரணமாக யார் முதலில் பந்து வீசுகிறார்களோ அவர்களுக்கே வெற்றி வாய்ப்பு மிக அதிகம். எனவே இங்கு டாஸ் ஒரு முக்கிய காரணியாக இருந்து வருகிறது.

- Advertisement -

இந்திய அணி நடந்து முடிந்த நான்கு போட்டிகளில் ஒருமுறை மட்டுமே டாஸ் வென்று முதலில் பந்துவீசி இருக்கிறது. மூன்று முறையும் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து பனிப்பொழிவில்தான் பந்து வீசியது.

இதனால் 222 ரன்கள் அடித்த போட்டியில் கூட தோற்க வேண்டிய கட்டாயத்துக்கு இந்திய அணி தள்ளப்பட்டது. குறிப்பிட்ட இந்த போட்டியில் மேக்ஸ்வெல் அதிரடியாக சதம் அடித்து, ஆஸ்திரேலியா அணியை வெல்ல வைத்தார். ஆனால் அந்தப் போட்டியில் இறுதிவரை ஆட்டம் இந்திய அணியின் கையில் தான் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஒட்டுமொத்தமாக இந்த தொடரின் நான்கு போட்டிகளையும் எடுத்துப் பார்த்தால் ஆஸ்திரேலியா அணியை விட பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டு இருக்கிறது. பீல்டிங்கில் மட்டுமே கொஞ்சம் பின்தங்கி இருந்தது என்று கூறலாம்.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் சைமன் காடிச் மேக்ஸ்வெல் தொடரில் விளையாடியிருந்திருந்தால் கதையை மாறி இருக்கும் என்பதான அர்த்தத்தில் பேசி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “நேற்று நடந்த நான்காவது போட்டியில் ஆஸ்திரேலியா அணியில் மேக்ஸ்வெல் இல்லாத காரணத்தினால்தான், ஆஸ்திரேலியா அணி அந்த குறிப்பிட்ட 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைய வேண்டியதாக அமைந்துவிட்டது.

இன்று மட்டுமல்ல இந்த தொடர் முழுக்கவே ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் இந்திய சுழல் பந்துவீச்சை சரியாக விளையாடவில்லை. நேராக விளையாட வேண்டிய பந்துகளை மடக்கி அடிக்க நினைத்து ஆட்டம் இழந்தார்கள். இந்த விஷயத்தில் அவர்கள் கொஞ்சம் வித்தியாசமாக விளையாடி இருக்கலாம்!” என்று கூறி இருக்கிறார்!

- Advertisement -