“2-3 வாரத்துக்கு முன்னாடி கூட NO.1 இடத்துல இருந்தியேபா.. நீ இப்படி பண்ணி இருக்கவே கூடாது!” – முகமது யூசுப் எக்கச்சக்க வருத்தம்!

0
1350
Yusuf

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பாகிஸ்தான் தோல்வி அடைய, பாகிஸ்தான் அணி மீதான விமர்சனம் இதுவரையில் நிற்கவேயில்லை!

பாகிஸ்தான் அணி பற்றிய விமர்சனத்தை பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் வரை முன் வைத்து விட்டார்கள். பாகிஸ்தான் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் தாண்டி, பாகிஸ்தான் நாட்டின் முக்கிய பத்திரிகைகள் இந்த தோல்வியை மிக கடுமையாக விமர்சித்து எழுதி வருகின்றன.

- Advertisement -

அதே சமயத்தில் இங்கிலாந்து அணிவுடனான வெற்றியை விட ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி மிக முக்கியமானதாக உணர்வுபூர்வமானதாக அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் ஏகத்துக்கும் கொண்டாட்டங்கள் நிலவி வருகிறது. நேற்று இரவே ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் பட்டாசுகள், வானவேடிக்கைகள் என தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இது மட்டும் இல்லாமல் ஆப்கானிஸ்தான் அணியின் வீரர்கள் நேற்று முழுவதும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வந்தார்கள். இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதை பெற்ற இப்ராகிம் ஜட்ரன், அந்த விருதை பாகிஸ்தானில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்ற ஆப்கானிஸ்தான் மக்களுக்கு அர்ப்பணிப்பதாக கூறியிருந்தார். அந்த அளவிற்கு இரு நாடுகளையும் இந்தப் போட்டி பாதித்திருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் லெஜெண்ட் முகமது யூசுப் இந்த போட்டி குறித்து கூறும் பொழுது “இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னால் நாங்கள் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தோம். ஆனால் தற்பொழுது தரவரிசையில் பத்தாவது இடத்தில் இருக்கும் ஒரு அணியிடம் தோல்வி அடைந்திருக்கிறோம்.

இதில் முக்கியமான விஷயம் அவர்கள் இலக்கை மிக எளிதாகத் துரத்தி வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவர்கள் இவ்வளவு எளிதாக இலக்கை துரத்தியது எங்களுக்கு நல்லது கிடையாது. இந்த தோல்விக்கு பிறகு எங்கள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என எல்லோரும் காயப்படுவார்கள். நாங்கள் பேட்டிங், ஃபீல்டிங், பவுலிங் என எந்த துறையிலும் சரியாக செயல்படவில்லை.

இந்த போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் பேட்டிங்கில் தைரியமாக இருக்க வேண்டும் என்று நான் கூறியிருந்தேன். இது நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் விளையாடிய ஆடுகளம் போல டர்னிங் விக்கட்டாக இருக்கும் என்று நினைத்தேன்.

ஆனால் நேற்றைய விக்கெட் அப்படியானதாக இல்லை. பேட்டிங் செய்ய கொஞ்சம் எளிமையாகவே இருந்தது. அதே சமயத்தில் பந்துவீச்சாளர்களுக்கு உதவவில்லை. ஆனாலும் கூட நாங்கள் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கக் கூடாது!” என்று கூறியிருக்கிறார்!