சச்சின் டெண்டுல்கர் பின்பற்றிய அதே விதிமுறையை நீங்களும் பின்பற்ற வேண்டும் – உம்ரான் மாலிக்குக்கு அறிவுரை வழங்கியுள்ள இர்பான் பதான்

0
38

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் 14 போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கடந்த ஆண்டு அவர் வீசிய வேகத்தை விட இந்த ஆண்டு அதி வேகமாக வீசி வருகிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் மணிக்கு 155 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசுகிறார். சிறப்பாக விளையாடி வரும் அவருக்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ஒரு வாய்ப்பு அளித்துள்ளது. நாளை முதல் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெற இருக்கின்ற ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் அவர் இந்திய அணிக்கு முதல் முறையாக விளையாட இருக்கிறார்.

- Advertisement -

அனைத்து ரசிகர்களும் அவர் இந்திய அணியில் விளையாடுவதை காண ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது இந்திய முன்னாள் ஆல்ரவுண்டர் வீரர் இர்பான் பதான் அவருக்கு ஒரு சில அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்.

சச்சின் டெண்டுல்கர் பின்பற்றிய வழியை நீங்கள் பின்பற்ற வேண்டும்

ஒவ்வொரு போட்டியிலும் நீங்கள் உங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். சரியான லைன் மற்றும் சரியான லெங்க்தில் நீங்கள் தொடர்ந்து பந்துவீச வேண்டும். இதற்காக நீங்கள் உங்களது வேகத்தை ஒருபொழுதும் குறைத்துக் கொள்ளக்கூடாது.

- Advertisement -

3 ஸ்டம்ப் எப்பொழுதும் உங்கள் குறியில் இருக்க வேண்டும். உங்களுடைய பந்து அதில் போய் இடிக்கும் அளவுக்கு தொடர்ந்து கவனம் செலுத்தி அதே லைனில் பந்து வீச வேண்டும்.

சச்சின் டெண்டுல்கர் ஒரு விதிமுறையை பின்பற்றுவார். இன்றைய ஆட்டத்தில் அவர் சிறப்பாக விளையாடி இருந்தாலும் இதை விட இன்னும் சிறப்பாக எப்படி விளையாட வேண்டும் என்று ஆராய்ந்து அதற்கு ஏற்றவாறு அவருடைய ஆட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வார். இந்த ஆட்டம் போதும் என்று அதே இடத்தில் நிற்காமல் அடுத்த இடத்துக்கு தன்னை முன்னெடுத்துச் செல்வார்.

- Advertisement -

நீங்களும் அதே விதிமுறையை தான் பின்பற்ற வேண்டும். நீங்கள் கிரிக்கெட் விளையாடும் வரை இதே விதிமுறையை கடைசிவரை பின்பற்ற வேண்டும். உங்களுக்கு ஆட்டத்தை நீங்கள் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல செல்ல, உங்களுடைய கிரிக்கெட் கேரியரில் தொடர் வெற்றிகள் வந்து சேரும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.