“என்னை மக்கள் மோசமா விமர்சிக்கிறாங்க.. அதுக்கான காரணம் இதுதான்.. மத்தவங்களுக்கு இது இல்ல!” – சதாப் கான் மனம் திறந்த பேச்சு!

0
269
Sadab

இந்தியாவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி மிகவும் சிக்கலான நெருக்கடியான நிலைமையில் இருக்கிறது.

பாகிஸ்தான் இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வென்று மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வி அடைந்திருக்கிறது. இதில் ஒரு தோல்வி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஒன்பது லீக் போட்டிகளில் குறைந்தபட்சம் 6 போட்டிகளை வென்றால்தான் அரைஇறுதி சுற்றை எட்ட முடியும் என்பது இயல்பானது. இதன் காரணமாக அடுத்து விளையாடக்கூடிய நான்கு போட்டிகளிலும் பாகிஸ்தான அணி வென்றால் மட்டுமே அரை இறுதிக்குள் வர முடியும்.

இந்த நிலையில் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தான் அணி இந்த உலக கோப்பையில் மிகவும் வலிமையான அணியாக இருக்கும் தென் ஆப்பிரிக்க அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இதே மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தோல்வி அடைந்திருந்தது.

பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது பந்துவீச்சில் மிடில் ஓவர்களில் யாராலும் விக்கெட் எடுக்க முடிவதில்லை என்பதுதான். மிடில் ஓவர்களில் விக்கெட் எடுக்காவிட்டால் எந்த அணியாலும் வெற்றி பெற முடியாது. இந்த இடத்தில் பாகிஸ்தான் சுழற் பந்துவீச்சாளர்கள் மிகவும் மோசமான செயல்பாட்டை கொண்டு இருக்கிறார்கள். குறிப்பாக நான்கு போட்டிகளில் விளையாடி துணை கேப்டன் சதாப் கான் இரண்டு விக்கெட் மட்டுமே வீழ்த்தி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து போட்டிக்கு முன்பாக பேசி உள்ள அவர் கூறும் பொழுது “நான் சிறப்பாக செயல்படாத காரணத்தினால் நான் மிகவும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறேன். ஒரு ஆல்ரவுண்டர் என்பதால் நான் மூன்று துறைகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டிய நெருக்கடி இருக்கிறது.

மோசமான நிலைமைகளிலிருந்து எப்படி வெளியேறி வெற்றிகரமாக வருவது என்று எங்களுக்கு தெரியும். இனி எல்லா போட்டியுமே எங்களுக்கு செய் அல்லது செத்துமடி என்பதாகத்தான் இருக்கிறது. ஆனால் நாளை முதல் எங்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கும் என்று நம்புகிறேன்.

நன்றாகப் பந்து வீசக்கூடிய அணிகள் போட்டியில் மிக ஆழமாகச் செல்கின்றன. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் நாங்கள் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தவில்லை. மீதமுள்ள போட்டிகளில் எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்!” என்று கூறியிருக்கிறார்,