“விராட் கோலிகிட்ட இருந்து NO.3 இடத்த திருட முடியாதுங்க.. அவரு பெரிய ஆள்..!” – ஆட்டநாயகன் ஸ்ரேயாஸ் ஓபன் ஸ்பீச்!

0
8935
Shreyas

இந்திய அணிக்கு தற்பொழுது ஒரு நல்ல விதமான தலைவலி உருவாக்கிக் கொண்டிருக்கிறது. உலக கோப்பைக்கு முன்பாக, உலகக்கோப்பை அணியில் இடம் பெறக்கூடிய யாருக்கெல்லாம் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறதோ, அவர்கள் எல்லோரும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்திய அணியில் எல்லோரும் தங்களுக்கான வாய்ப்பை பயன்படுத்தி தங்களை நிரூபித்திருந்த நிலையில், ஸ்ரேயாஸ் மற்றும் சூரியகுமார் இருவர் மட்டுமே வாய்ப்புகளைப் பயன்படுத்தி சிறப்பாக ஏதும் செய்யாமல் இருந்தார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் அரைசதம் அடித்து சூரியகுமார் ஒருநாள் கிரிக்கெட்டில் எப்படி பேட்டிங்கை அணுக வேண்டும் என்பதை கண்டுபிடித்துக் கொண்டார்.

இந்த நிலையில் ஸ்ரேயாஸ் மட்டுமே தன்னை நிரூபிக்க வேண்டிய தேவை இருந்தது. இப்படி ஒரு அழுத்தத்தில் இருந்து இன்றைய போட்டிக்கு விளையாட வந்த அவர், யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு ஆரம்பத்தில் இருந்து தைரியமான அணுகுமுறையை வெளிப்படுத்தி விளையாடி சதம் அடித்தார்.

தற்போது இதன் மூலம் இந்திய அணிக்காக உலகக் கோப்பை அணியில் அஸ்வின் வரை யாரெல்லாம் இடம்பெறுவார்களோ அனைவரும் தங்களது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். தற்பொழுது இதை வைத்து 15 பேர் கொண்ட அணியை உருவாக்கலாம். ஆனால் 11 பேர் கொண்ட விளையாடும் அணியை உருவாக்குவது கடினமான, ஆரோக்கியமான ஒரு தலைவலியாக இருக்கிறது.

- Advertisement -

இன்றைய போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற ஸ்ரேயாஸ் பேசும் பொழுது
“இது ஒரு ரோலர் கோஸ்டர் மாதிரி இருக்கிறது. இது அருமையான உணர்வு. எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மற்றும் அணியினர் எனக்கு ஆதரவாக இருந்தனர். நான் டிவியில் போட்டிகளை பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் நான் அணிக்குள் வந்து விளையாட விரும்பினேன். என்னை நம்பியதற்கு நன்றி.

எனக்கு வலியும் காயமும் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது. ஆனால் நான் எதை நோக்கமாக கொண்டேன் என்று எனக்குத் தெரியும். இன்று எனது திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சி. நான் பேட்டிங் செய்ய சென்றபோது எதையும் சிக்கலாகிக்கொள்ள விரும்பவில்லை.

- Advertisement -

நான் முதலில் ஆடுகளத்திற்கு எனது கண்களை பழக்கப்படுத்த நினைத்தேன். அப்படித்தான் நான் எனக்கு நம்பிக்கையை அளித்துக் கொண்டேன். நான் நெகிழ்வானவன் அணிக்கு என்ன தேவையோ அந்த இடத்தில் நான் பேட்டிங் செய்ய தயாராக இருக்கிறேன்.

விராட் கோலி ஒரு கிரேட் பேட்ஸ்மேன். அவரிடமிருந்து அந்த மூன்றாவது இடத்தை திருடுவதற்கு வாய்ப்பே கிடையாது. என்னுடைய வேலை நான் தொடர்ந்து சீராக ரன்கள் எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்!