“ஐபிஎல்-ல அடுத்த வருஷம் எனக்கு ஒன்னு செய்யறதா தோனி சொல்லி இருக்கார்” – தோனியின் புகழை எல்லா பக்கமும் பரப்பும் தீக்சனா!

0
626
Dhoni

இந்தியாவில் 13 வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் ஐந்தாம் தேதி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் துவங்கி நவம்பர் 19ஆம் தேதி அதே மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற்ற முடிவடைகிறது!

இந்த முறை இந்தியாவில் நடக்க இருக்கின்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் சொந்த நாட்டில் நடக்கும் அனுகூலம் இந்திய அணிக்கு பெரியதாக இருக்காது என்று பலராலும் கணிக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது ஐபிஎல். 10 ஐபிஎல் அணிகளிலும் முக்கிய கிரிக்கெட் நாடுகளைச் சேர்ந்த பல வீரர்கள் முக்கிய வீரர்களாக இருந்து இந்தியாவின் எல்லா மைதானங்களிலும் எல்லா சூழ்நிலைகளிலும் தொடர்ச்சியாக விளையாடுகிறார்கள். இதன் காரணமாக அவர்களுக்கு இந்திய சூழ்நிலை மிகவும் பரிச்சயமான ஒன்றாக மாறியிருக்கிறது.

இதன் காரணமாக இந்திய அணிக்கு உள்நாட்டில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் தனிப்பட்ட அனுகூலம் எதுவும் இருக்காது என்று கூறப்படுகிறது. தற்போது இது குறித்தும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தன்னுடைய கேப்டன் மகேந்திர சிங் தோனி குறித்தும் இலங்கையின் சுழற் பந்துவீச்சாளர் தீக்ஷனா சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அவரது ஃபீல்டிங் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தீக்ஷனா கூறும்பொழுது
” ஐபிஎல் பைனல் முடிந்து நான் வீட்டிற்கு செல்ல இருந்த பொழுது மகேந்திர சிங் தோனியை சந்தித்தேன். அப்பொழுது அவர் அடுத்த முறை உங்களுக்கு பந்து வீச்சு பயிற்சி கிடையாது பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் பயிற்சி மட்டுமே தரப்படும் என்று சொன்னார். ஏனென்றால் நான் இந்த தொடரில் சரியான முறையில் இவற்றில் செயல்படவில்லை.

- Advertisement -

அவர் ஒரு எளிய மனிதர். எல்லாவற்றுக்கும் எளிதாக இருக்க விரும்புபவர். அவர் அமைதியானவர். தருணங்களை அனுபவிப்பதற்காக வருபவர். நீங்கள் சென்று மணி கணக்கில் அவரிடம் பேசலாம். நீங்கள் விரும்பினால் அவருடன் இருந்தே தொடர்ந்து அரட்டை அடிக்கலாம். அவருடன் சாப்பிடலாம்.

அவர் மிகவும் நேர்மையான மனிதர். அவர் உங்களிடம் ஏதாவது சொல்ல நினைத்தால் அதை உங்கள் முகத்திற்கு நேராக சொல்லக் கூடியவர். அவருடன் விளையாடியது மற்றும் ட்ரெஸ்ஸிங் ரூமை பகிர்ந்து கொண்டது இந்த வகையில் நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவன்.

இந்தியாவில் ரசிகர் கூட்டம் வெறித்தனமாக இருக்கிறது. அதேபோல் நாங்கள் இலங்கையில் விளையாடும் பொழுதும் மைதானங்கள் நிரம்பி வழிகிறது. இந்தியா பெரும்பாலும் இலங்கையை போலவேதான் இருக்கிறது. தர்மசாலா மட்டுமே கொஞ்சம் குளிராக இருந்தது. எனவே இந்தியாவில் எல்லா மைதானங்களிலும் எல்லா சூழ்நிலைகளிலும் விளையாடிய அனுபவம் இருக்கிறது. அதை இந்த உலகக் கோப்பையில் திருப்பிக் கொடுப்பதற்கான நேரம் இது!” என்று கூறியிருக்கிறார்!