உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்.. ஒரே வெற்றியால் கிடுகிடுவென உயர்ந்த இந்தியா.. முழு விவரம்

0
2505

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025- 27 ஆம் ஆண்டுக்கான புள்ளி பட்டியலில் இந்திய அணி தற்போது முன்னேற்றம் கண்டிருக்கின்றது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த தொடரில் இறுதிப் போட்டியில் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணியே பைனலுக்கு செல்லும்.

இந்த நிலையில் இந்தியா முதல் இரண்டு இறுதி சுற்றுக்கும் தகுதி பெற்ற நிலையில், மூன்றாவது இறுதிப் போட்டியில் பைனலுக்கு செல்லும் வாய்ப்பை இந்தியா இழந்தது. இந்த நிலையில் 2025-27 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிள் இறுதிப்போட்டியில் இந்தியா தகுதிப் பெற வைக்க வேண்டும் என்ற முனைப்பில் பிசிசிஐ இருக்கின்றது.

- Advertisement -

வெளிநாட்டு தொடரின் முக்கியத்துவம்:

இதற்காக பல்வேறு நடவடிக்கைகளை பிசிசிஐ எடுத்துள்ளது. சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின் போன்ற வீரர்கள் ஓய்வு பெற்ற நிலையில் இளம் வீரர்களை வைத்து இந்தியா புது சைக்கிளில் களம் இறங்கியுள்ளது. சொந்த மண்ணில் நடைபெறும் தொடர்களில் இந்தியா வெற்றி பெற்றாலும் வெளிநாடுகளில் நடைபெறும் தொடரில் குறைந்தபட்சம் இரண்டு போட்டியிலாவது வெல்ல வேண்டும்.

அந்த வகையில் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது இந்திய அணி 2  போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ளது. இதனால் இந்தியாவுக்கு இருந்த மிகப்பெரிய கண்டம் தற்போது தவிர்க்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

புள்ளி பட்டியலில் இந்தியா முன்னேற்றம்:

இந்த சூழலில் ஆஸ்திரேலியா அணி விளையாடிய மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று 100 வெற்றி சதவீதம் புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.இலங்கை அணியை பொறுத்தவரை இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி ஒரு சமன் என 66.67% இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதையும் படிங்க: இந்திய அணிக்கு குவியும் பாராட்டுக்கள்.. சச்சின் முதல் புஜாரா வரை வாழ்த்து.. சிராஜை ஒரே வார்த்தையால் புகழ்ந்த சச்சின்

இந்தியா தற்போது ஒரு இடம் முன்னேறி மூன்றாவது இடத்தை பிடித்திருக்கின்றது 5 போட்டிகளில் விளையாடு 2 வெற்றி இரண்டு தோல்வி ஒரு டிரா என 46.66 சதவீதம் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி 43.3 வெற்றி சதவீதத்துடன் நான்காம் இடத்தில் உள்ளது. வங்கதேச அணி 16.67 வெற்றி சதவீதத்துடன் ஐந்தாவது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் அணி புள்ளி கணக்கை தொடங்காமல் ஆறாவது இடத்திலும் உள்ளது.

- Advertisement -