“எழுதி வச்சுக்கோங்க.. ரெண்டே வருஷம் இந்த இந்திய வீரர்தான் கிரேட்டஸ்ட்டா இருப்பாரு!” – இந்திய முன்னாள் வீரர் கணிப்பு

0
517
ICT

சூரியகுமார் தலைமையில் இந்திய இளம் அணி இதுவரை ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா என இரண்டு டி20 தொடர்களை சந்தித்து இருக்கிறது.

மொத்தம் எட்டு போட்டிகளில் விளையாடிய சூரியகுமார் தலைமையிலான இளம் இந்திய அணி இரண்டு போட்டிகளில் தோற்று, ஒரு போட்டியில் முடிவில்லாமல் போக, ஐந்து போட்டியில் வென்றிருக்கிறது. எந்த ஒரு தொடரையும் இழக்கவில்லை.

- Advertisement -

மேலும் சூரியகுமார் யாதவின் கேப்டன்சி பொறுப்பு அவருடைய பேட்டிங்கை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றிக் கணக்கை துவக்க அவரே முதலில் அதிரடியாக ஆரம்பித்து இருந்தார்.

இதேபோல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலும் விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு அரை சதம் மற்றும் ஒரு சதம் என சிறப்பாக விளையாடியதோடு தொடர் நாயகன் வருதையும் வென்றிருக்கிறார். ஆச்சரியப்படுத்தும் விதமான அவரது பேட்டிங் முறை இப்பொழுதும் தொடர்கிறது.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “இன்னும் ஓரிரு வருடங்கள் விளையாடினால் சூரியகுமார் யாதவ்தான் டி20 கிரிக்கெட்டின் தலைசிறந்தவர் என்று நாம் அறிவிக்க வேண்டும்.

- Advertisement -

டூ ஆர் டை போட்டிகளில் இந்தியா தோற்பது என்பது அரிதாக மாறி வருகிறது. இந்த இடத்தில் இந்திய அணியில் யாரையாவது பாராட்டினால், உடனே மக்கள் உலகக் கோப்பை இறுதிப் போட்டி தோல்வியை கொண்டு வருகிறார்கள். அதை வைத்து எப்பொழுதும் ஒரு வீரரை பேசிக்கொண்டு இருப்பது தவறு. சூரியகுமார் ஏன் இறுதிப்போட்டியில் ரன் அடிக்கவில்லை என்று கேட்பது நியாயமற்றது.

சூரிய குமாரின் அனைத்து டி20 சதங்களும் வெவ்வேறு விதமான நாடுகளில் வந்திருக்கிறது. அவர் பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் மட்டும் விளையாடக் கூடியவர் கிடையாது. அவர் எல்லா கிரிக்கெட் வடிவங்களிலும் ஒரு பேட்ஸ்மேனாக இருப்பதற்கான அறிக்கையைஇந்த பேட்டிங் மூலம் வெளியிட்டிருக்கிறார்.

என் கருத்துப்படி இந்த நேரத்தில் அவர்தான் மிகச்சிறந்த டி20 பேட்டர். அவரைவிட சிறந்தவர்கள் யாரும் கிடையாது. 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை விளையாடி, அதற்கு மேல் ஒன்று இரண்டு வருடங்கள் அவர் விளையாடினால், மேலும் ஓய்வு பெறும் பொழுது அவரே டி20 கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக எப்பொழுதும் இருப்பார்!” என்று கூறியிருக்கிறார்!