“எழுதிவைங்க.. 3ஃபார்மேட்.. 10வருஷம்.. இந்தியாவுக்காக இவர் விளையாட போறார்!” – இந்திய முன்னாள் வீரர் கணிப்பு!

0
8229
ICT

அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. தற்பொழுது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் முடிவடைந்து இருப்பதால், இனி அதிகமாக டி20 போட்டிகள் சர்வதேச அளவில் நடைபெறும்.

அடுத்த வருடம் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் விதமாக, அந்த உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகள் எல்லாமே விறுவிறுப்பான வேலைகளில் இறங்கும். மேற்கொண்டு அணியை முழுமையாக உருவாக்க பரிசோதனை முயற்சிகளில் ஈடுபடும்.

- Advertisement -

இந்திய அணி நிர்வாகத்தை பொறுத்தவரையில் தற்போது ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்ராகுல் ஆகியோருக்கு இந்திய டி20 அணியில் இடம் தர விரும்புகிறதா? அவர்கள் மேற்கொண்டு சர்வதேச டி20 கிரிக்கெட் விளையாடு விரும்புகிறார்களா? என்பது குறித்து தெரியவில்லை.

ஆனால் கடந்த ஆண்டு முதலில் ஹர்திக் பாண்டியா தலைமையில் முன்னணி வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களைக் கொண்டு இந்தியா கிரிக்கெட் நிர்வாகம் புதிய டி20 அணியை உருவாக்கி வருகிறது. இதனால் இளம் வீரர்களைக் கொண்டு இந்தியா தைரியமாக டி20 உலகக் கோப்பையை சந்திக்குமா? என்பது குறித்து பார்க்க வேண்டும்.

இதன் பொருட்டு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கும் ருத்ராஜ், இஷான் கிஷான், ஜெய்ஸ்வால் ரிங்கோ சிங் மற்றும் திலக் வர்மா ஆகியோர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனம் எடுத்து வருகிறார்கள்.

- Advertisement -

தற்பொழுது இந்த இளம் வீரர்களை, நட்சத்திர வீரர்கள் திரும்பி வந்தால் ஒதுக்கி வைக்க வேண்டும் என்றால், யாரை ஒதுக்கி வைப்பது என்கின்ற பெரிய தலைவலி இன்றைய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு இருக்கிறது. ஆனால் துவக்க வீரராக ஜெய்ஷ்வால் தன்னுடைய இடத்தை முழுவதுமாக உறுதி செய்திருக்கிறார் என்றே தெரிகிறது.

இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் அபிஷேக் நாயர் கூறும் பொழுது “ஜெய்ஸ்வால் கடந்த இரண்டு டி20 தொடர்களில் இந்திய அணியின் ஒரு அங்கமாக இருந்தார். மேலும் கிடைத்த வாய்ப்புகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் கூட அவர் எதிர்கால நட்சத்திரமாக உருவாகி வருகிறார்.

எனவே நீங்கள் அவரை அணியில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் கொஞ்ச காலம் இருக்கிறது. அவர் தற்போது விளையாடிக் கொண்டிருக்கும் விதத்தில், அவர் இந்திய அணியின் எதிர்கால வீரராக இருப்பார் மற்றும் அவரது இடம் உறுதி என்பதாகவே தெரிகிறது!” என்று கூறி இருக்கிறார்!