கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

WPL 2026.. 5 அணிகளும் தக்கவைத்த வீராங்கனைகள் பட்டியலை வெளியிட்டது.. கையிருப்பு பணம் எவ்வளவு? ஏலம் எப்போது?

மகளிர் பிரீமியர் லீக் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கிறது. ஐசிசி மகளிர் உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற நிலையில் மகளிர் கிரிக்கெட் தொடர்பான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மெகா ஏலம் வரும் நவம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்த ஏலத்தில் பங்கேற்பதற்கு முன் எந்த வீராங்கனைகளை தக்க வைத்துக் கொள்கிறோம்? யாரை விடுவிக்கின்றோம் என்பது குறித்து மகளிர் பிரிமியர் லீக் தொடரில் உள்ள 5 அணிகளும் தற்போது அறிவித்திருக்கிறது. ஒவ்வொரு அணிக்கும் 15 கோடி ரூபாய் கையிருப்பு இருக்கும்.

விதிகள் என்ன?

இதில் அதிகபட்சமாக ஐந்து வீராங்கனைகளை தேர்வு செய்யலாம்.இதில் மூன்று வீராங்கனைகள் இந்தியாவைச் சேர்ந்தவர்களாகவும், இரண்டு பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும். இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல் அணியும் அதிகபட்சமாக 5 வீராங்கனைகளை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது.

ஆர்சிபி நான்கு வீராங்கனைகளையும், குஜராத் அணி இரண்டு வீராங்கனைகளையும், உபி வாரியர்ஸ் அணி ஒரு வீராங்கனையும் தக்க வைத்திருக்கிறது. இந்த நிலையில் ஐந்து அணிகளும் எந்த வீராங்கனைகளை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களிடம் தற்போது எவ்வளவு பணம் எஞ்சி இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம்.

- Advertisement -

நடப்புச் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்மன் பிரீத் கவுரை இரண்டரை கோடி ரூபாய்க்கும், ஆல்ரவுண்டர் நாட் சிவியர் பிரண்டை 3.30 கோடி ரூபாய்க்கும்,  ஹெலி மேத்தீவ்சை 1.75 கோடி ரூபாய்க்கும் இந்திய வீராங்கனை அமஞ்சோத் கவுரை ஒரு கோடி ரூபாய்க்கும் தமிழக வீராங்கனை காமினியை 50 லட்சம் ரூபாய்க்கும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

மும்பை அணி விவரம்:

மும்பை அணியிடம் தற்போது 5 கோடியே 75 லட்சம் ரூபாய் எஞ்சி இருக்கிறது. ஆர்சிபி அணியிடம் 6.15 கோடி ரூபாய் தற்போது எஞ்சி இருக்கிறது. அவர்கள் ஸ்மிருதி மந்தனாவை மூன்றரை கோடி ரூபாய்க்கும். ரிச்சா கவுசை 2 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கும், ஸ்ரேயங்கா பாட்டில் 60 லட்சம் ரூபாய்க்கும்,  எலிஸ்லி பெர்ரியை பெரிய 2 கோடி ரூபாய்க்கும் தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.

டெல்லி அணியிடம் கைவசம் 5 கோடியே 75 லட்சம் ரூபாய் இருக்கிறது. அவர்கள் ஷாபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் மெர்சியான் காப் அண்ணாபெல் சதர்லேண்ட் ஆகியோரை தலா இரண்டு புள்ளி இரண்டு கோடி ரூபாய்க்கு தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்திய அணிக்காக விளையாடாத நிக்கி பிரசாத் என்ற வீராங்கனை 50 லட்சம் ரூபாய்க்கு தக்க வைத்திருக்கிறார்கள்.

குஜராத்,உபி அணி விவரம்:

குஜராத் அணியிடம் கைவசம் ஒன்பது கோடி ரூபாய் எஞ்சி இருக்கிறது. அவர்கள் ஆஸ்திரேலியா வீராங்கனை ஆஸ்லீக் கார்டனரை மூன்றரை கோடி ரூபாய்க்கும், பெத் மூனியை இரண்டரை கோடி ரூபாய்க்கும் தக்க வைத்திருக்கிறார்கள். உத்தரபிரதேச அணியிடம் 14.5 கோடி ரூபாய் எஞ்சி இருக்கிறது.

இதையும் படிங்க: இந்தியா தான் இதில் உலகில் தலை சிறந்த அணி.. எங்க தோல்விக்கு காரணம் இதுதான் – மிட்சல் மார்ஸ் கருத்து

அவர்கள் ஸ்வேதா சரவாத் என்ற இந்திய அணிக்காக விளையாடாத வீராங்கனையை 50 லட்சம் ரூபாய்க்கு தக்க வைத்திருக்கிறார்கள். ஐந்து வீராங்கனைகளை முழுமையாக கைப்பற்ற அணிக்கு ஆர் டி எம் கார்டு பயன்படுத்தவும் வசதி இருக்கிறது. வரும் நவம்பர் 27ஆம் தேதி மெகா ஏலம் டெல்லியில் நடைபெறுகிறது.

- Advertisement -
Published by