“உலக கோப்பையை ஜெயிக்கலனா இந்திய அணி சாதாரணமா?.. வெளிய வாங்க!” – கபில்தேவ் பரபரப்பான பேச்சு!

0
721
Kapil

உலகக்கோப்பையில் இந்திய அணி தோல்வி அடைந்தது இந்திய கிரிக்கெட்டில் எந்த வித பெரிய சூறாவளிகளையும் கிளப்பவில்லை.

காரணம் இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு இறுதிப் போட்டிக்கு சென்று அந்த ஒரு நாளில் மட்டும்தான் ஆடுகளத்தின் காரணமாக சரியாக செயல்பட முடியாமல் தோல்வியடைந்தது.

- Advertisement -

உலகக் கோப்பைக்குப் பின்பு தோல்வி அடைந்து வெளியேறிய சில அணிகளில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இங்கிலாந்து நடப்பு சாம்பியன் ஆக இருந்து உலகக் கோப்பைக்கு வந்து அரை இறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.

இந்த வகையில் எடுத்துக் கொண்டால் இந்திய அணி இந்திய கிரிக்கெட் ரசிகர்களை தங்களால் முடிந்தவரை மகிழ்ச்சிப்படுத்தியே உலகக்கோப்பை தொடர் முழுவதும் வைத்திருந்தார்கள்.

இறுதிப் போட்டிக்கு கொடுக்கப்பட்ட ஆடுகளம் என்பது முழுக்க முழுக்க கண்டிஷன் சார்ந்தது. அங்கு யார் முதலில் பேட்டிங் செய்திருந்தாலும் அப்படியான நிலைதான் ஏற்பட்டிருக்கும். இரண்டாம் பகுதியில் பனிப்பொழிவு பேட்டிங் செய்வதை எளிமையாக்கி இருக்கும்.

- Advertisement -

இப்படி டாஸ் முடிவில் சிக்கிக்கொண்ட இந்திய அணி தோல்வி அடைந்தது இந்திய அணி வீரர்கள், இந்திய அணி ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் என பலரையும் மிகவும் காயப்படுத்தி இருக்கிறது.

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள கபில் தேவ் கூறும் பொழுது “நீங்கள் வாழ்க்கையில் நடந்ததை விட்டு முன்னேற வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நான் காலப்போக்கில் உணர்ந்து கொண்ட விஷயம் இதுதான்.

நாங்கள் மூவ் – ஆன் ஆகிவிட்டோம். நாங்கள் போதுமானவர்களாக இல்லை. ஆனால் தற்போது இளம் கிரிக்கெட் வீரர்கள் எங்களை விட மிகச் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களை சரியான திசையில் வழிநடத்தும் அனுபவம் மட்டும்தான் எங்களிடம் இருக்கிறது. அவர்கள் மிகச் சிறந்தவர்கள்.

இன்றைய இந்திய அணியினர் உலகக் கோப்பையை வெல்ல முடியவில்லை. ஆனால் அவர்கள் நன்றாக விளையாடினார்கள். இங்கு எல்லோரும் மனதிலும் வெற்றி மட்டுமே இருக்கிறது. ஆனால் விளையாடும் விதம்தான் முக்கியமானது.

மற்றவர்களும் இங்கு விளையாட வந்தார்கள். அவர்கள் விளையாடியதை நாம் பார்த்தோம். ஆனால் நாம் மிகச் சிறப்பாக விளையாடினோம். உலகக் கோப்பையை வெல்ல முடியவில்லை என்பதில் எனக்கும் வருத்தம்தான். ஆனால் இது ஒரு பொருட்டு கிடையாது. இதை விட்டு வெளியே வர வேண்டும். நாம் என்ன சரியாக செய்யவில்லை என்பதை பார்த்து புரிந்து கொள்ள வேண்டும். இவைகள்தான் முக்கியம்!” என்று இந்திய அணிக்கு ஆறுதல் கூறியிருக்கிறார்!