ஐபிஎல் இறுதிப்போட்டி ரிசர்வ் டேயால் புதிய சிக்கலில் மாட்டிய உலக டெஸ்ட் இந்திய அணி!

0
2612
Ict

நேற்றுடன் முடிந்திருக்க வேண்டிய ஐபிஎல் 16 வது சீசன் மழையின் காரணமாக இன்றைய நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது!

வருகின்ற ஜூன் மாதம் ஏழாம் தேதி இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர்த்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி மோத இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் ஐபிஎல் இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டு ரிசர்வ் நாளுக்குச் செல்வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தயாரிப்புகளில் இந்திய அணிக்கு பெரிய பாதிப்பை உண்டாக்கக் கூடியதாக அமைந்திருக்கிறது.

ஐபிஎல் லீக் சுற்றின் முடிவில் இந்திய அணி நிர்வாகத்தில் இருந்து ஊழியர்களும் சில வீரர்களும் புறப்பட்டு இங்கிலாந்து சென்றனர். இதற்கு அடுத்து குவாலிஃபயர் போட்டிகள் முடிவடைந்து ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் இங்கிலாந்து புறப்பட்டு சென்றனர்.

ஐபிஎல் இறுதிப் போட்டியில் மோதவுள்ள சென்னை மற்றும் குஜராத் அணிகளில் ரகானே, சுப்மன் கில் மற்றும் வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி ஆகியோர் உலக டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களாக இருக்கிறார்கள்.

- Advertisement -

துவக்க வீரராக சுப்மன் கில், நடுவரிசை வீரராக ரகானே மற்றும் மிக முக்கியமாக முக்கிய வேகப்பந்துவீச்சாளராக முகமது சமி ஆகியோர் சீக்கிரத்தில் இங்கிலாந்து கிளம்ப முடியாதது இந்திய டெஸ்ட் அணிக்குப் பெரிய பாதிப்பை உருவாக்கும்.

முன்கூட்டியே சென்று இங்கிலாந்தின் கால நிலைக்குப் பழகுவதும், அங்கு சில பயிற்சிகளில் ஈடுபடுவதும் வீரர்களுக்கு மிகவும் முக்கியமானது ஆகும். ஆனால் ஐபிஎல் இறுதிப் போட்டி ரிசர்வ் நாளுக்குச் சென்று உள்ளதால் முக்கிய வீரர்கள் உடனடியாக இங்கிலாந்து செல்ல முடியாதது பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது!