உலகக்கோப்பை.. தந்தை மகன் அபூர்வ சாதனை.. இந்தியாவிற்கு எதிராக அப்பா.. பாகிஸ்தானுக்கு எதிராக பையன்.!

0
2870

2023 ஆம் ஆண்டின் உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் வைத்து விளையாடின. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக்கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது.

முன்னதாக இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 286 ரன்கள் எடுத்தது. முகமது ரிஸ்வான் மற்றும் சவுத் ஷகீல் ஆகியோர் 68 ரன்கள் எடுத்தனர். நெதர்லாந்து அணியின் தரப்பில் ஆல்ரவுண்டர் பஸ் டி லீட் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

பஸ் டி லீட் நேற்றைய போட்டியில் பங்கேற்றதன் மூலம் உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடிய தந்தை மகன் ஜோடியில் 7-வது இடத்தை பெற்றார். இதற்கு முன்பாக இவரது தந்தை டிம் டி லீட் 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த உலகக்கோப்பை போட்டியில் பங்கு பெற்ற அவர் அந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக 35 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி இருக்கிறார்.

அவற்றில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், ஹர்பஜன் சிங் மற்றும் ஜாகீர் கான் ஆகியோரின் விக்கெட்டும் அடங்கும். இதனால் இந்திய அணி நெதர்லாந்துக்கு எதிராக 208 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆனாலும் தங்களது சிறப்பான பந்துவீச்சின் மூலம் இந்தியா வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் ஆட்டநாயகனாக டிம் டி லீட்தேர்வு செய்யப்பட்டார்.

- Advertisement -

20 வருடங்களுக்குப் பிறகு அவரது மகன் பஸ் டி லீட் நேற்றைய போட்டியின் மூலம் உலக கோப்பையில் அறிமுகமாகி பாகிஸ்தான் அணிக்கு எதிராக 62 ரன்கள் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் தனது சிறப்பான பந்து வீசின் மூலம் முகமது ரிஸ்வான், இப்திகார் அகமது, சதாப்கான் மற்றும் ஹசன் அலி ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் இந்த போட்டியில் இவர் 68 பந்துகளில் 67 ரன்களும் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது தந்தை இந்திய அணிக்கு எதிராக 35 ரன்கள் கொடுத்து நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தியதுதான் உலகக் கோப்பை போட்டிகளில் நெதர்லாந்து அணியின் சிறந்த பந்துவீச்சாக இருந்து வருகிறது. மேலும் நேற்றைய போட்டியில் பஸ் டி லீட் வீழ்த்திய 62/4 விக்கெட்டுகள் உலகக் கோப்பை போட்டிகளில் நெதர்லாந்து வீரரின் நான்காவது சிறந்த பந்துவீச்சாகும்.

- Advertisement -