உலக கோப்பை தோல்வி.. ஐசிசி ரேங்கிங்.. அதிரடி மாற்றங்கள்.. ஆட்சி செய்வது யார்?!

0
7983
ICT

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நிறைவு பெற்றதை அடுத்து, ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைகளை வெளியிட்டு இருக்கிறது. இதில் கவனிக்கத்தக்க சில மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன.

இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை ஆஸ்திரேலிய அணியிடம் இழந்த பொழுதும் கூட, ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.

- Advertisement -

இந்தியா 121 புள்ளிகள், ஆஸ்திரேலியா 114 புள்ளிகள், தென் ஆப்பிரிக்கா 111 புள்ளிகள், பாகிஸ்தான் 111 புள்ளிகள், நியூசிலாந்து 102 புள்ளிகள், இங்கிலாந்து 97 புள்ளிகள் என முதல் ஆறு இடங்களில் இருக்கின்றன.

இதற்கு அடுத்து ஐசிசி ஒருநாள் கிரிக்கெட்டில் வெளியிட்டுள்ள பந்துவீச்சு தரவரிசை பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகாராஜ் 741 புள்ளிகள் உடன் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்.

இந்த வரிசையில் இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட் 73 புள்ளிகள், முகமது சிராஜ் 699 புள்ளிகள் என முதல் மூன்று இடங்களில் இருக்கிறார்கள். பும்ரா நான்காவது இடம் குல்தீப் ஆறாவது இடம், முகமது சமி பத்தாவது இடத்தில் இருக்கிறார்கள்.

- Advertisement -

ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் சுப்மன் கில் 826 புள்ளிகள் உடன் முதல் இடத்திலும், பாகிஸ்தான் பாபர் அசாம் 824 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்திலும் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 791 புள்ளிகள் உடன் மூன்றாவது இடத்திலும், அதேபோல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 769 புள்ளிகள் உடன் நான்காவது இடத்துக்கும் முன்னேறி அசத்தியிருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் அய்யர் 696 புள்ளிகள் உடன் பன்னிரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

பொதுவாக மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் இந்திய அணி வீரர்களும், அணியும் மிகச் சிறப்பான தரநிலையில் காணப்படுகிறது. ஆனால் ஐசிசி தொடர்களை வெல்வது மட்டுமே தற்பொழுது இந்திய அணிக்கு பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது!