2019 உலக கோப்பையில் விராட் கோலியை வச்சு நான் இதை செய்யாம தப்பு பண்ணிட்டேன் – ரவி சாஸ்திரி வருத்தம்!

0
957
Viratkohli

சில உலக கோப்பைகளின் போது தான் சில அணிகள் அந்த உலகக் கோப்பையை கைப்பற்றுவதற்கு மிகத் தகுதியானதாக இருப்பதாக தெரியும். பெரும்பாலும் அப்படி கணிக்கப்படும் அணிகளே உலகக் கோப்பைகளை வென்று இருக்கின்றன!

இந்த நிலையில் இங்கிலாந்தில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில், இந்திய அணி வெற்றி பெறுவதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டது. லீக் சுற்றில் இந்திய அணியின் செயல்பாடும் அப்படித்தான் இருந்தது. துவக்க வீரரான ரோகித் சர்மா ஐந்து சதங்கள் அடித்து அசத்தியிருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் மான்செஸ்டரில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 240 ரன்களை துரத்திய இந்திய அணி அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அந்தப் போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கேஎல் ராகுல் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தலா ஒரு ரன்னுக்கு திரும்பி விட்டார்கள். இந்திய அணி 5 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து இருந்தது.

அப்போது இந்திய அணிக்கு இருந்த ஒரே பிரச்சனை இதுவாகத்தான் இருந்தது. டாப் ஆர்டர் விளையாடினால் ஜெயிப்பார்கள் இல்லையென்றால் ஒட்டுமொத்தமாக சுருண்டு சிறிய அணி போல தோற்று வெளியேறுவார்கள். அப்போது இருந்த நான்காவது இடத்திற்கான பேட்ஸ்மேன் பிரச்சனை இப்போது வரை இந்திய அணிக்கு தீரவே கிடையாது.

- Advertisement -

தற்பொழுது இந்திய மண்ணில் முதல்முறையாக ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடர் முழுமையாக அக்டோபர் மாதம் 5ஆம் தேதி துவங்கி நவம்பர் 19ஆம் தேதி வரையில் நடைபெற இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த உலகக் கோப்பை போட்டியிலும் நம்பர் நான்காம் இடத்திற்கான பிரச்சனைகள் இருக்கிறது. தற்பொழுது இதுகுறித்து பழைய நினைவு ஒன்று ரவி சாஸ்திரி பகிர்ந்து இருக்கிறார்.

இது குறித்து ரவி சாஸ்திரி கூறும் பொழுது ” விராட் கோலி நம்பர் நான்காம் இடத்தில் பேட் செய்ய வேண்டும் என்றால், தன்னுடைய அணியின் நலனுக்காக அவர் நம்பர் நான்காம் இடத்தில் பேட்டிங் செய்யக்கூடியவர். அப்பொழுது எங்களுக்கு நம்பர் நான்காம் இடத்திற்கான பிரச்சினைகள் இருந்தது உங்களுக்கு தெரியும். 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது நான் இது குறித்து அப்போதைய தேர்வு குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் இடம் விவாதிக்கலாம் என்று இருந்தேன்.

உங்களுக்கு தெரியும், ஏனென்றால் எங்கள் பேட்டிங் வரிசையில் முதல் இரண்டு அல்லது மூன்று பேர் முதலில் வெளியேறினால், நாங்கள் அந்தப் போட்டியிலேயே இல்லாமல் போய்விடுகிறோம். அது அப்பொழுதும் நிரூபிக்கப்பட்டது. மேலும் விராட் கோலியின் சாதனைகளை எடுத்துப் பார்த்தால் அவர் நம்பர் நான்காம் இடத்திற்கு மிகவும் பொருத்தமான ஒரு பேட்ஸ்மேன்!” என்று கூறி இருக்கிறார்!

- Advertisement -