14000 ரன்.. சச்சின் சங்கக்கராவை முந்தும் விராட் கோலி.. ஒரு நாள் தொடரில் படைக்க உள்ள வரலாற்று சாதனை

0
942

ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. டி20 தொடருக்கு இளம் வீரர்கள் விளையாடும் நிலையில் ஒருநாள் தொடருக்கு சீனியர் வீரர்கள் இந்திய அணியில் இணைவார்கள்.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் சீனியர் வீரரான விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனையை படைக்க காத்திருக்கிறார்.

- Advertisement -

இங்கிலாந்து ஒரு நாள் தொடர்

விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் சமீபகாலமாக மோசமான பேட்டிங் சரிவை சந்தித்து வந்தாலும் ஒரு நாள் கிரிக்கெட்டில் மிகச் சிறந்த வீரராக திகழ்கிறார் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. சமீபத்தில் டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற்ற நிலையில் தற்போது டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களில் மட்டும் விளையாடி வருகிறார். இந்திய அணி சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு முன்பாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் தொடர்களில் விளையாட உள்ளது.

டி20 தொடருக்கு சூரியகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி விளையாட உள்ள நிலையில் ஒருநாள் தொடருக்கு விராட் கோலி, ரோஹித் சர்மா உட்பட சீனியர் வீரர்கள் அணியில் இணைவார்கள். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விராட் கோலி விளையாடும் பட்சத்தில் 96 ரன்கள் குவித்தால் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்துவார்.

- Advertisement -

விராட் கோலி நிகழ்த்தப் போகும் வரலாற்று சாதனை

இதுவரை 295 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 13906 ரன்கள் குவித்திருக்கிறார். எனவே இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி விளையாட உள்ள நிலையில் 96 ரன்கள் எடுத்தால் 300 போட்டிகளுக்குள் 14,000 ரன்கள் கடந்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை விராட் கோலி நிகழ்த்துவார்.இந்த சாதனையை நிகழ்த்த சச்சின் டெண்டுல்கர் 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 14,000 ரன்கள், இலங்கை அணியின் ஜாம்பவான் குமார் சங்ககாரா 378 போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:வீட்டுக்கு போனதும் ரோஹித் இதை செய்யணும்.. அதனால இங்கி டெஸ்ட்ல அவர் ஆடமாட்டார் – கில்கிரிஸ்ட் பேட்டி

மேலும் இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சங்ககாரா 14,243 ரன்கள் குவித்து ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இரண்டாவது முன்னணி வீரராக இருக்கிறார். மேலும் இந்த சாதனையை கடக்க விராட் கோலிக்கு இன்னும் 329 ரன்கள் தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதனை அடுத்ததாக நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்குள் விராட் கோலி நிகழ்த்துவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -