டி20 உலகக் கோப்பை 2024

16ஆவது ஓவர்ல பந்தை பார்த்தேன்.. அப்பயே அந்த விஷயம் தெரிஞ்சிருச்சு.. அங்கதான் மாறுச்சு – தொடர் நாயகன் பும்ரா பேட்டி

நடப்பு டி20 உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த உலகக்கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதை பும்ரா வென்று இருக்கிறார். வெற்றிக்குப் பிறகு பும்ரா அதற்கான காரணங்கள் குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

இன்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு விராட் கோலி மிகச் சிறப்பாக விளையாடி 59 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தது.

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி ஒரு கட்டத்தில் 24 பந்தில் 26 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் டேவிட் மில்லர் மற்றும் ஹென்றி கிளாசன் களத்தில் இருந்தார்கள். இந்த நேரத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் பும்ரா இருவரும் சேர்ந்து தென் ஆப்பிரிக்கா அணியை சுருட்டி விட்டார்கள். இறுதியாக எட்டு விக்கெட் இழப்புக்கு தென் ஆப்பிரிக்கா 169 ரன்கள் எடுக்க, இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதோடு சாம்பியன் பட்டத்தையும் வென்றது.

இந்தத் தொடரில் மொத்தம் 15 விக்கெட்டுகள் கைப்பற்றி தொடர் நாயகன் விருதை வென்ற பும்ரா பேசும் பொழுது “பொதுவாக நான் என் உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்து வேலையை செய்ய விரும்பக் கூடியவன். ஆனால் இன்று என்னிடம் வார்த்தைகள் கிடையாது. நான் ஒரு போட்டியில் வெற்றிக்குப் பிறகு அழுவது கிடையாது. ஆனால் இன்று என் உணர்வுகள் மேலோங்கி வெளியில் வருகிறது. நாங்கள் ஒரு கட்டத்தில் சிக்கலில் இருந்தோம். ஆனால் அந்த இடத்தில் இருந்து போட்டியை வென்றது சந்திரனை தாண்டியது போல.

- Advertisement -

இன்று எங்கள் குடும்பம் இங்கே இருக்கிறது. இதுபோன்ற ஒரு விளையாட்டில் உங்கள் அணி வெற்றி பெறுவதை விட சிறந்த உணர்வு வேறு எதுவும் இருக்க முடியாது. நான் என்னக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சி செய்தேன். பெரிய ஒரு நாள் வரும் பொழுது நீங்கள் அதை செய்ய வேண்டும்.இந்தத் தொடர் முழுக்க நான் மிகவும் தெளிவாக உணர்ந்தேன்.

இதையும் படிங்க : கடைசி 6 மாதம் நிறைய நடந்தும் நான் வாய் திறக்கல.. டிராவிட்ட இப்படி அனுப்பி வைக்கிறது சந்தோஷம் – ஹர்திக் பாண்டியா பேட்டி

நான் எப்பொழுதும் ஒரு ஓவர் மற்றும் ஒரு பந்தை பற்றி மட்டும் தான் யோசிப்பேன். அதிகம் முன்னால் போய் யோசிக்க மாட்டேன். இல்லையென்றால் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைக்க முடியாது. இப்பொழுது போட்டியை வென்று விட்டோம். இப்போது எவ்வளவு வேண்டுமானாலும் கத்தலாம் உணர்ச்சியை வெளிப்படுத்தலாம். பதினாறாவது ஓவர் பந்தை கொடுத்தபோது, பந்து நன்றாக தெரிந்து பழையதாக இருந்தது. எனவே பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகும், பேட்ஸ்மேன்கள் ஷாட் ஆட கடினம் எனத் தெரியும். அங்குதான் போட்டி மாறியது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by