இன்று ஐசிசி ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு விராட் கோலி 59 பந்துகளில் 76 ரன்கள், அக்சர் படேல் 31 பந்தில் 47 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா அணிக்கு அன்றிச் நோர்க்கியா மற்றும் கேசவ் மகாராஜ் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதற்கு அடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கிளாசன் சிறப்பாக விளையாடி 27 பந்தில் 52 ரன்கள் எடுத்தார். ஒரு கட்டத்தில் வெல்லும் இடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்கா கடைசியாக 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்து, ஏழு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணி இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பை தொடரை வென்றது. முக்கியமான கட்டத்தில் கிளாசன் டேவிட் மில்லர் மற்றும் ரபாடா விக்கெட்டுகளை ஹர்திக் பாண்டியா கைப்பற்றி அசத்தினார்.
இந்தப் போட்டிக்கு பிறகு மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசிய ஹர்திக் பாண்டியா “மிகவும் அர்த்தமாய் இருந்தது. மிகவும் உணர்ச்சிவசமாய் இருக்கிறது. நாங்கள் மிகவும் கடினமாக உழைத்து வருகிறோம். ஆனால் ஏதோ கிளிக் ஆகவில்லை. இன்று நம் முழு தேசமும் விரும்பியதைச் செய்திருக்கிறோம். எனது கடந்த ஆறு மாதங்கள் எப்படி இருந்தது என்று நான் வாய் திறந்து பேசவே இல்லை. நான் கடினமாக உழைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்று தெரியும்.
இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததில் மேலும் மகிழ்ச்சி. மேலும் எப்போதும் நாங்கள் நம்பிக்கை உடன் இருந்தோம். நாங்கள் அமைதியாக இருந்து வேலையை செய்து அவர்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்துவதுதான் திட்டம். கடைசி ஐந்து ஓவர்களை வீசிய பும்ரா வரை எல்லோருக்கும் எனது பாராட்டுகள்.
இதையும் படிங்க : சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுகிறேன்.. ரோகித் இதற்கு தகுதியான ஆள்.. எல்லோருக்கும் நன்றி – விராட் கோலி பேட்டி
நான் அமைதியாக இல்லாவிட்டால் என்னால் சிறப்பாக செயல்பட முடியாது என்று தெரியும். நான் வீசிய ஒவ்வொரு பந்திலும் 100% கொடுக்க நினைத்தேன். மேலும் எப்போதும் அழுத்தத்தை அனுபவித்தே வந்திருக்கிறேன். டிராவிட் மிகவும் சிறந்த ஒரு மனிதர். அவர் எங்களுடன் நண்பர்களாகவே மாறிவிட்டார். அவருக்கு இப்படி ஒரு பிரியாவிடை கொடுப்பது மகிழ்ச்சி. மேலும் அனைத்து ஊழியர்களுக்கும் எனது நன்றி” என்று கூறி இருக்கிறார்.






