கேன் வில்லியம்சனுக்கு ஓய்வு – மூன்று டி20 ஆட்டத்திற்கு மூன்று புதிய நியூசிலாந்து கேப்டன்கள்

0
231
Newzealand Cricket Team

டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்து அந்தந்த நாடுகள் தங்களின் சொந்த நாட்டிற்கு திரும்பி விட்டன. நியூசிலாந்து அணி நியூசிலாந்திற்கு செல்வதற்கு பதிலாக டி20 தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ளது. இந்திய அணி நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியிடம் படுமோசமாக தோல்வியுற்றது. இதனால் இந்த டி20 தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. மேலும் விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகி கொண்டதாலும் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிந்து விட்டாலும் புதிய கேப்டனாக ரோகித் மற்றும் புதிய பயிற்சியாளராக டிராவிட் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். இந்திய அணியின் இந்த புதிய தொடக்கம் எவ்வாறு அமையப் போகின்றது என்பதையும் காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

தொடர்ச்சியாக போட்டிகள் விளையாடுவதால் இந்த டி20 தொடரில் இருந்து விராட் கோலி, பும்ரா, ஷமி போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல நியூசிலாந்து அணியிலும் அந்த அணி கேப்டன் வில்லியம்சன் இந்த டி20 தொடரில் பங்கேற்க மாட்டார் என்று முன்னமே அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் தொடருக்கு தயார் செய்யும் வகையில் டி20 தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்படுவதாக நியூசிலாந்து நிர்வாகம் தெரிவித்தது. அப்போது வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி டி20 தொடருக்கு கேப்டனாக செயல்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது நடக்க இருக்கும் 3 ஆட்டங்களுக்கும் 3 புதிய கேப்டன்கள் செயல் படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. முதல் ஆட்டத்திற்கு ஏற்கனவே கூறியதுபோல டிம் சவுதி கேப்டனாக செயல்படுவார். இதனைத் தொடர்ந்து நடக்க இருக்கும் இரண்டு ஆட்டங்களுக்கும் இரண்டு புதிய கேப்டன்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்படுவர் என்று நியூசிலாந்து தரப்பு கூறியுள்ளது.

- Advertisement -

தொடர்ந்து வீரர்கள் வரிசையாக போட்டிகளை ஆடிக் கொண்டே இருப்பதால் அவர்களுக்கு ஏற்படும் மனச் சுமையை குறைப்பதற்காக இந்த முயற்சி எடுக்கப்பட்டிருக்கலாம். இந்திய அணியில் இது போன்ற வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு வீரர்களின் பணிச்சுமையை குறைக்க முன்வரலாம் என்பதே தற்போது பல ரசிகர்களின் எண்ணமாக இருக்கின்றது.