தமிழக வீரர் ஜெகதீசன் ஸ்ரேயாஸ் இல்லாத குறையை நீக்குவாரா? – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பதில்!

0
84
Jagadeesan

இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தி வரும் ஐபிஎல் டி20 லீக் தனது பதினாறாவது சீசனில் தற்பொழுது அடியெடுத்து வைத்திருக்கிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் அகமதாபாத் மைதானத்தில் குஜராத் சென்னை அணிகள் பலப்பரிட்சை நடத்த இருக்கின்றன!

16ஆவது சீசன் சில அணிகளுக்கு வருத்தத்துடன் ஆரம்பிக்கிறது. இந்த வகையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக இழந்து தொடரை சந்திக்க இருக்கிறது.

- Advertisement -

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் 15 கோடிக்கு போய் கேப்டன் வேண்டும் என்பதற்காகவே கொல்கத்தா அணி நிர்வாகம் ஸ்ரேயாஸ் ஐயரை போராடி வாங்கியது. மேலும் இந்திய ஆடுகளங்களில் அவர் திறமையான பேட்மேனும் கூட.

அவர் இல்லாமல் இந்த வருட ஐபிஎல் சீசனை ஆரம்பிப்பது கொல்கத்தா அணிக்கு விரும்பக்கூடிய ஒன்று அல்ல. தற்பொழுது இவருக்கு பதிலாக தற்காலிகமாக நிதிஷ் ராணா கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஸ்ரேயா ஐயர் இல்லாததால் பேட்டிங்கில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை யார் நிரப்புவார்கள் என்பது ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது.

இந்த வெற்றிடத்தை தமிழகத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் மற்றும் முன்னாள் சிஎஸ்கே வீரர் நாராயணன் ஜெகதீசன் நிரப்புவாரா? என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசும் பொழுது ” ஸ்ரேயாஸ் ஒரு பெரிய இம்பேக்ட் பிளேயர். மேலும் ஒரு சீசன் முழுவதும் ஒரு பிளேயர் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். ஐபிஎல் போல ஒரு நீண்ட தொடரில் இளைய வீரர்கள் சீசன் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்களாக இருப்பது மிகவும் சவாலான விஷயங்களில் ஒன்று. இது கடினமானது!” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” இப்படி சில பிளேயர்கள் ஒன்று இரண்டு நல்ல இன்னிங்ஸ்களை ஆரம்பத்தில் பெறுவதும், பின்பு அவர்கள் அப்படியே மறைந்து போவதும் நடந்து கொண்டே இருக்கிறது. நான் ஜெகதீசனின் டி20 சாதனைகளை மற்றும் அவரது டி20க்கு குறைவான 110 ஸ்ட்ரைக்ரேட்டை பார்க்கவில்லை. அவர் அழுத்தத்தை கட் செய்து நீடிப்பாரா என்பதைதான் பார்க்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

கொல்கத்தா அணியில் நாராயணன் ஜெகதீசன் குறிப்பு பேசியுள்ள ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் டாம் மூடி ” சில நேரங்களில் அறியப்படாத வீரர்களுக்கு கிடைக்கும் இப்படியான வாய்ப்புகள் அவர்களது வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை உண்டாக்கும். இது ஜெகதீசன் முன்னேறும் தருணமாக கூட இருக்கலாம். கொல்கத்தா அணி இந்த முறை ஜெகதீசன் பக்கம் சாய்வார்கள் என்று நான் நினைக்கிறேன். அவர் ஐபிஎல் தொடரில் ஒரு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாவிட்டாலும், உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் தற்போது முன்னேற்றமான விளையாட்டை கொண்டு உள்ளார்!” என்று கூறியுள்ளார்!