இன்று கோலியின் மெகா ரெக்கார்டை உடைப்பாரா சூர்யகுமார்?.. டி20 கிரிக்கெட்டில் காத்திருக்கும் சாதனை!

0
2355
Surya

தற்போதைய காலகட்டத்தில் மிகவும் வரவேற்பை பெற்ற கிரிக்கெட் வடிவமாக டி20 கிரிக்கெட் இருந்து வருகிறது. இந்த கிரிக்கெட் வடிவத்தின் சாதனைகளை எதிர்காலத்தில் மிகவும் முக்கியமானவைகளாக ரசிகர்களால் பார்க்கப்படும் நிலை ஏற்படுவது உறுதி!

இந்த வகையில் இந்திய டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் யாராலும் எட்டிப் பிடிக்க முடியாத சில சாதனைகளை செய்துதான் ஓய்வு பெறுவார் என்று கணிக்கப்படுகிறது.

- Advertisement -

குறிப்பாக மிடில் ஆர்டரில் வந்து அவர் அளவுக்கு ஸ்ட்ரைக்ரேட்டில் விளையாடக்கூடிய பேட்ஸ்மேன்கள் உலக கிரிக்கெட்டில் எங்குமே கிடையாது. அதாவது அவரது பக்கத்தில் கூட கிடையாது. ஃபீல்டிங் வெளியே சென்ற பின்பு கூட அவரது அதிரடியை கட்டுப்படுத்த பந்துவீச்சாளர்களால் முடிவதில்லை.

மேலும் குறுகிய காலத்தில் குறைந்த போட்டிகளில் அவர் நிறைய முறை டி20 கிரிக்கெட் ஆட்டநாயகனாக வந்து அசத்தியிருக்கிறார். இப்படியான சில சாதனைகளை அவரிடம் இருந்து எதிர்காலத்தில் பறிப்பது கடினம்.

தற்போது அவர் டி20 கிரிக்கெட்டில் 1940 ரன்களை 55 போட்டி மற்றும் 52 இன்னிங்ஸ் மூலம் அடித்திருக்கிறார். மேலும் இதில் பத்து முறை ஆட்டம் இழக்காமல் இருந்திருக்கிறார். அவரது அதிகபட்ச ஸ்கோராக 117 ரன்கள் இருக்கிறது. மேலும் மூன்று முறை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சதம் மற்றும் 16 முறை அரை சதம் அடித்திருக்கிறார்.

- Advertisement -

டி20 சர்வதேச கிரிக்கெட் வடிவத்தில் 46 ஆவரேஜ் உடன், 173 ஸ்ட்ரைக்ரேட்டில் அவர் இந்த ரன்களை கொண்டு வந்திருக்கிறார். இதுதான் எதிர்காலத்தில் அவரிடமிருந்து பறிக்க முடியாத சாதனையாக அமையலாம்.

மேற்கொண்டு அவர் இன்று நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட்டில் 60 ரன்கள் எடுத்தால் அதிவேகமாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2000 ரன்களை எட்டிய இந்தியர் என்கின்ற சாதனையை படைப்பார். இதற்கு முன்பு விராட் கோலி 60 போட்டியில் 56 இன்னிங்ஸ்கலில் இதைச் செய்திருக்கிறார். இன்று சூரிய குமாருக்கு 56வது போட்டி மற்றும் 53வது இன்னிங்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் குறைந்த போட்டிகளில் அதிவேகமாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2000 ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியல் :

54 போட்டி – 52 இன்னிங்ஸ் – பாபர் அசாம்
63 போட்டி – 52 இன்னிங்ஸ்- முகமது ரிஸ்வான்
60 போட்டி – 55 இன்னிங்ஸ் – விராட்கோலி
62 போட்டி – 58 வின்னிங்ஸ் -கேஎல்.ராகுல்
62 போட்டி – 62 இன்னிங்ஸ்-ஆரோன்பின்ச்