உலகக்கோப்பை அணியில் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்குமா? அஷ்வின் வெளிப்படையான பதில்!

0
556
Ashwin

50 ஓவர் உலகக் கோப்பைத் தொடர் இந்த முறை இந்தியாவில் நடக்க இருக்கிறது. இப்போது இருந்து ஐந்து மாதங்கள் கழித்து இந்தியாவில் தொடங்க இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை குறித்து ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் எக்கச்சக்க எதிர்பார்ப்பு நிலவி வருகிறது!

இந்த நிலையில் இந்திய அணியின் பிரதான நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்ட்பிரீத் பும்ரா, நடுவரிசை பேட்ஸ்மேன் ஸ்ரேயாஷ் மற்றும் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் ஆகியோர் காயத்தாலும், விபத்தால் ஏற்பட்ட காயத்தாலும் விளையாட முடியாமல் இருப்பது இந்திய கிரிக்கெட் அணிக்கு பெரிய பின்னடைவாக இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் கே எல் ராகுல் விக்கெட் கீப்பராக தொடர, ஸ்ரேயாஸ்க்கு பதிலாக சூரியகுமார் நடுவரசையில் பேட்டிங் செய்தார். கேஎல் ராகுல் தன் பணியை சரிவர செய்த போதிலும், இன்னொரு பக்கத்தில் சூரியகுமார் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகளிலும் முதல் பந்தியிலேயே ஆட்டம் இழந்து கோல்டன் டக் அடித்து வெளியேறினார்.

இதனால் உலகக்கோப்பை தயாரிப்பில் இந்திய பேட்டிங் நடுவரிசை கேள்விக்குறியாக நிற்கிறது. இதனால் இதை சரி செய்யும் விதமாக தற்பொழுது இந்திய கிரிக்கெட் வாரியத்தில் முழு ஒப்பந்த வீரராக இந்த வருடம் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இதன்மூலம் அவர் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் உலகக் கோப்பை தயாரிப்புக்குள் வருகிறார் என்று தெரிகிறது.

இது குறித்து இந்திய அணியின் முன்னணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது ” இதுகுறித்து நிறைய கருத்துக்கள் வந்தன. இந்திய அணி நிர்வாகம் எத்தனை வீரர்களை பேக் செய்து இருக்கிறது என்று வாசிம் ஜாபர் கூட தெரிவித்து இருந்தார். இதே வழியில் சஞ்சு சாம்சனையும் பேக் செய்ய வேண்டும். இதுகுறித்து அவரிடம் ரசிகர்கள் கூட கேட்டு வருகிறார்கள். ஒவ்வொருவரும் எல்லோரையும் பேக் செய்ய சொல்கிறார்கள். நாம் ஏன் இந்த விஷயத்தில் சஞ்சு சாம்சனை ஆதரிக்கக் கூடாது? ” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்!

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” யாருக்கு ஆதரவாக இருக்க வேண்டும் அல்லது வேறு எதையும் சொல்ல நான் வரவில்லை. இந்தியா உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அது நடக்க நேர்மறையான எல்லா அதிர்வுகளையும் நாம் வழங்க வேண்டும். அதுதான் எனது சிந்தனை செயல்முறை!” என்று தெரிவித்திருக்கிறார்.

சஞ்சு சாம்சன் 11 போட்டிகளில் 330 ரன்களை 66 ஆவரேஜில் எடுத்திருக்கிறார். அதே சமயத்தில் சூரியகுமார் யாதவ் 433 ரன்களை 24 ஆவரேஜில்தான் எடுத்திருக்கிறார். ரசிகர்களும் இதைக்காட்டி சஞ்சு சாம்சனை ஏன் உலகக் கோப்பையில் விளையாட வைக்க கூடாது? என்று வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -