“ரோகித் சர்மா டீம் உலக கோப்பையை ஜெயிக்குமா?” – முதல் முறையாக தல தோனி பளீர் பதில்!

0
5169
Dhoni

இந்திய அணி கடைசியாக உலகக்கோப்பை தொடரை வென்றது மகேந்திர சிங் தோனி தலைமையில் 2011ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில்தான்.

அதேபோல் ஐசிசி தொடரை இந்தியா கடைசியாக வென்றது மகேந்திர சிங் தோனி தலைமையில் இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன் டிராபி தொடரைதான்.

- Advertisement -

உலகக்கோப்பை மற்றும் ஐசிசி கோப்பைகளின் வறட்சி இந்திய அணிக்கு ஏறக்குறைய ஒரு தசாப்தத்திற்கு மேல் இருந்து வருகிறது. ஐசிசி தரவரிசையில் முதல் இடங்களில் அதிகபட்சம் இருந்தாலும் கூட, பெரிய தொடர்களின் வெற்றி இல்லாமல் இந்திய கிரிக்கெட் கொஞ்சம் சோர்வாகவே இருக்கிறது.

இந்த முறை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்தியாவில் நடைபெற்று வரும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இதற்கு முடிவு கட்டுமா? என்கின்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மிக அதிகமாகவே இருக்கிறது.

இந்திய அணி தற்போது தான் விளையாடிய ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. மேலும் விளையாட இருக்கும் நான்கு போட்டிகளில் ஒன்றை வென்றால் கூட இந்திய அணியால் அரையிறுதியில் இருக்க முடியும் என்பது வசதியான நிலை.

- Advertisement -

மேலும் நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என எல்லா துறைகளிலும் இந்திய வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இதன் காரணமாக எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக இருக்கிறது.

தற்பொழுது ஒரு தனியார் நிகழ்வில் ரோஹித் சர்மாவின் இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை கைப்பற்றுமா? என்று மகேந்திர சிங் தோனியிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அந்தக் கேள்விக்கு அவருக்கே உரிய பாணியில் பதில் கொடுத்து இருக்கிறார்.

இதுகுறித்து மகேந்திர சிங் தோனி பதில் கூறும்போது “இது மிகவும் நல்ல அணி. அணியின் சமநிலை மிக நன்றாக இருக்கிறது. அணியின் வீரர்கள் அனைவரும் நன்றாக விளையாடுகிறார்கள். இதனால் எல்லாமே நன்றாக இருக்கிறது. இதற்கு மேல் நான் எதுவும் சொல்ல மாட்டேன். புத்திசாலிகளுக்கு இதுவே போதும், பெரிய சிக்னல் தேவைப்படாது!” என்று கூறியிருக்கிறார்!