“அடுத்த வருடம் தல தரிசனம் இருக்குமா?” – சிஎஸ்கே அணியின் உரிமையாளர் கொடுத்த ஆச்சரியமான பதில்!

0
489

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் சென்னை அணி முதல் இடத்திற்கு முன்னேறி இருக்கும் . ஆனால் எதிர்பாராத விதமாக அறிவிக்கட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது .

முதலில் ஆடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 144 ரன்கள் எடுத்தது . இதனைத் தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணி நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 144 ரன்கள் எட்டி வெற்றி பெற்றது . இந்த வெற்றியின் மூலம் அந்த அணியின் பிழையா சுற்றிற்கான வாய்ப்பு இன்னும் இருக்கிறது .

- Advertisement -

லீக் ஆட்டங்களில் நேற்று நடைபெற்ற போட்டிதான் சென்னையில் நடைபெறும் கடைசி போட்டியாகும் . அதன் பிறகு பிளே ஆப் சுற்று போட்டிகள் சென்னையில் வைத்து நடைபெற இருக்கின்றன . லீக் போட்டிகள் நேற்றோடு முடிவடைந்ததால் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சென்னை அணியின் கேப்டன் எம் எஸ் தோனி தலைமையிலான வீரர்கள் ரசிகர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினர் .

இதற்கான அறிவிப்பை போட்டி துவங்குவதற்கு முன்பாகவே சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்திருந்தது . இதனைத் தொடர்ந்து இந்த ஐபிஎல் போட்டி தான் தோனியின் கடைசி போட்டியாக இருக்குமோ என ரசிகர்களிடம் சந்தேகம் உருவாகி இருக்கிறது . லக்னோ அணியுடன் போட்டியின் போது “இந்த ஐபிஎல் தான் எனது கடைசி என முடிவு செய்யவில்லை” என்று எம்.எஸ் தோனி தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் தோனியின் முடிவு எப்படி இருக்கும் என்று சிஎஸ்கே அணியின் உரிமையாளர் காசி விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார் . இதுகுறித்து பேசிய அவர் ” சிஎஸ்கே அணியின் அடையாளமாக கடந்த 16 ஆண்டுகளாக இருந்து வருபவர் மகேந்திர சிங் தோனி . வரது தலைமையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வெற்றிகரமான அணியாக வடம் வந்து கொண்டிருக்கிறது சிஎஸ்கே ” என்று தெரிவித்தார் .

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு எவ்வளவு காலம் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவார் என்ற கேள்வி ரசிகர்களிடமும் கிரிக்கெட் விமர்சகர்களிடமும் இருந்து வருகிறது . அவர் இன்னும் நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார் . கண்டிப்பாக அடுத்த வருடம் அவர் விளையாடுவார் என நம்புவோம் . ரசிகர்களும் தொடர்ந்து சிஎஸ்கே அணிக்கு அளித்து வரும் ஆதரவை எப்போதும் போராளித்து வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார் .

இந்தப் பேட்டியில் இருந்து மகேந்திர சிங் டோனி அடுத்த ஐபிஎல் தொடரிலும் விளையாடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர் . ஒருவேளை சிஎஸ்கே அணி இந்த வருடம் சாம்பியன் பட்டம் பெற்றால் அடுத்த வருடம் விளையாடுவாரா என்ற சந்தேகம் ரசிகர்களிடம் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது . இருந்தாலும் சிஎஸ்கே அணியின் உரிமையாளரின் பேட்டியில் இருந்து மகேந்திர சிங் டோனி அடுத்த வருட ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்வார் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் உருவாகி இருக்கிறது