அகமதாபாத்தில் இன்று மழை பெய்யுமா? இறுதிப் போட்டி நடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட தகவல்!

0
1378
Ipl2023

உலகில் மிகப்பெரிய டி20 கிரிக்கெட் லீக் ஐபிஎல் டி20 தொடரின் இறுதிப்போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நேற்றுடன் முடிவுக்கு வந்திருக்க வேண்டியது. ஆனால் மழையால் போட்டி இன்றைய நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.

பதினாறாவது ஐபிஎல் சீசனின் இறுதிப்போட்டி நேற்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில் துவங்க இருந்த நிலையில் பேய் மழை கொட்டியதால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

- Advertisement -

நேற்றைய போட்டியில் இரவு 11 மணி வரையில் மழை நிற்பதற்காக நடுவர்கள் குழு மற்றும் மைதான ஊழியர்கள் காத்திருந்தபொழுதும், மழை நிற்கவில்லை.

அந்த நேரத்திற்குப் பிறகு மழை நின்றால் அதற்கு அடுத்து ஒரு மணி நேரத்திற்கு மேல் ஈரம் காய வேலை செய்ய வேண்டும் என்பதால் போட்டி நேற்று அந்த நேரத்துடன் ரத்து செய்யப்பட்டது.

அதே சமயத்தில் குஜராத் அகமதாபாத் மைதானத்தை ஒட்டி இன்றும் மழை பெய்யும் என்று நேற்றே பரவலான செய்திகள் சமூக வலைதளத்தில் கசிந்திருந்தன.

- Advertisement -

இப்படி ஏதாவது நடந்தால் லீக் சுற்றில் முடிவில் அதிக வெற்றிகளை பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கே கோப்பை வழங்கப்படும் என்பது சிஎஸ்கே ரசிகர்களின் மனதில் பெரும் கவலையை உண்டாக்கி இருக்கிறது.

இந்த நிலையில் இன்று குஜராத் அகமதாபாத் மைதானத்தை ஒட்டி மழை நிலவரம் எப்படி இருக்கிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ள அறிக்கை வெளியாகி இருக்கிறது.

அந்த அறிக்கையில் “இன்று அகமதாபாத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது போட்டி தொடங்குவதற்கு முன்பாக நடக்கும். காற்றில் ஓட்டம் சரியாக இருக்கிறது மற்றும் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்யும். இந்த முறை இந்த முறை பாகிஸ்தான் வரை பெய்யும்.

போட்டி நடைபெறும் நேரத்தில் மழை பெய்தால் கூடுதல் அறிவிப்புகள் வெளியிடப்படும். போட்டி நேரத்தில் மழை இல்லை என்றால் அறிவிப்புகள் இருக்காது!” என்று கூறியிருக்கிறார்!