ஹர்திக் பாண்டியா பந்து வீச வருவாரா? காயம் எப்படி இருக்கிறது?.. பிசிசிஐ உடனுக்குடன் தெரிவித்த முக்கிய தகவல்!

0
592
Hardik

இந்திய அணி உலகக் கோப்பை தொடரில் இன்று தனது நான்காவது போட்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக மகாராஷ்டிரா மாநிலம் புனே மைதானத்தில் மோதி வருகிறது!

பங்களாதேஷ் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் விளையாடாத நிலையில் நஜிபுல் சாந்தோ கேப்டனாக பொறுப்பேற்று இருக்கிறார். இன்று தாசில் வெற்றி பெற்ற அவர் தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என அறிவித்தார்.

- Advertisement -

தொடக்க ஆட்டக்காரர்களாக வந்த தன்ஷித் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் இருவரும் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் பும்ரா மற்றும் சிராஜ் 20 பந்து வீச்சையும் மிகுந்த கவனத்தோடு எதிர் கொண்டு, எட்டு ஓவர்களை நிதானமாக கடத்தினார்கள்.

இதன் பிறகு ஒன்பதாவது ஓவருக்கு ஹர்திக் பாண்டியா வர அவர்கள் தாக்குதலில் ஈடுபட ஆரம்பித்தார்கள். ஹர்திக் பாண்டியா வீசிய ஒன்பதாவது ஓவரின் மூன்றாவது பந்தின் போது அவர் பந்தை தடுக்க முயன்று முட்டியில் காயமடைந்தார்.

இதன் காரணமாக அவருக்கு மருத்துவக் குழு களத்திற்கு வந்து சிகிச்சை அளித்தது. பிறகு பந்து வீச முயற்சி செய்து பார்த்த அவரால் பந்து வீச முடியவில்லை என்பது தெரிந்தது. கேப்டன் ரோஹித் சர்மா மேற்கொண்டு அவரைப் பந்து வீச வேண்டாம் என்று சொல்லி வெளியே அனுப்பி விட்டார்.

- Advertisement -

இந்த நிலையில் மாற்று வீரரே இல்லாத ஹர்திக் பாண்டியா காயம் எப்படி ஆனதாக இருக்கிறது? அவர் திரும்பவும் களத்திற்கு பந்து வீச வருவாரா? என்பது குறித்து பெரிய கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தது.

இந்த நிலையில் பிசிசிஐ அவரது காயம் குறித்து தற்பொழுது உடனுக்குடன் தகவல் வெளியே தெரிவித்து இருக்கிறது. அதில் மேற்கொண்டு ஹர்திக் பாண்டியா பீல்டிங் செய்ய வர மாட்டார் என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும் ஹர்திக் பாண்டியா காயம் குறித்து ஸ்கேன் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒருவேளை அவர் பேட்டிங் செய்ய வந்தே ஆக வேண்டிய கட்டாய சூழ்நிலை இருந்தால் அவர் பேட்டிங் செய்ய வரலாம். நெருக்கடி குறைவாக இருக்கும் பட்சத்தில் அவரை பேட்டிங் செய்யவும் அனுப்ப மாட்டார்கள் என்று தெரிகிறது.

தற்போதைய உலகக் கோப்பை இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இடத்தை நிரப்பக்கூடிய வீரர்கள் என்று யாரும் கிடையாது. அவரது காயம் தீவிரமாக இருந்தால் அது நடப்பு உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை!