சிஎஸ்கே பிளே ஆப்ஸ் போகுமா? சிஎஸ்கே சார்பில் யார் அதிக ரன் விக்கெட் எடுப்பார்கள்? – ஆகாஷ் சோப்ரா கணிப்பு!

0
160
Ipl2023

கிரிக்கெட் உலகில் பலராலும் பரவலாக அதிகம் எதிர்பார்க்கப்படுகிற டி20 லீக்கான இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர், இன்னும் மூன்று நாட்களில் மார்ச் 31ஆம் தேதி துவங்கி நடந்து மே மாதம் 28ஆம் தேதி முடிய இருக்கிறது!

இந்திய கிரிக்கெட்டின் மிக வெற்றிகரமான கேப்டனாக விளங்கிய மகேந்திர சிங் தோனி அதை அப்படியே ஐபிஎல் தொடரிலும் சென்னை அணிக்கு செய்திருக்கிறார். இன்று ஐபிஎல் தொடரில் அதிகம் ரசிகர்களை கொண்டிருக்கக் கூடிய வீரராகச் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பிறகும் அவர் விளங்குகிறார்!

- Advertisement -

ஐபிஎல் தொடரில் மும்பை அணி ஐந்து முறை கோப்பையைக் கைப்பற்றி இருந்தாலும் பிளே ஆப் சுற்றுக்கு அதிக முறை சென்றது, அதிக முறை இறுதிப்போட்டியில் விளையாடியது என்று நான்கு முறை கோப்பையை வென்று சீரான செயல்பாட்டை வைத்திருப்பது மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான்.

42 வயதாகும் அவருக்கு இந்த ஐபிஎல் தொடர் கடைசி ஐபிஎல் தொடராக இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. சொந்த அணி மக்களின் முன்னால் சொந்த மைதானத்தில் ஓய்வு பெறுவேன் என்று அவர் கூறியிருந்ததால் இந்த முறை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க இருப்பதால் மேலும் அவருக்கு வயது ஆகிவிட்டதால் இந்த ஆண்டு அவர் ஓய்வு பெறவே அதிகம் வாய்ப்பு இருக்கிறது.

தற்பொழுது இந்த தொடர் குறித்தும் தோனி குறித்தும் பேசி உள்ள முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ” சென்னை அணிக்குச் சொந்த மைதானத்தில் போட்டிகள் நடப்பதால் அவர்கள் முதல் நான்கு இடங்களுக்குள் வந்து ப்ளே ஆப்ஸ் சுற்றுக்குள் நுழைவார்கள் என்று நினைக்கிறேன். தோனி அவர்களுக்கு இது இறுதி தொடராக இருக்கும் என்பதால் இது நடக்காமல் போனால் அவரது வெற்றிப் பயணத்தில் இது ஒரு மோசமான குறிப்பாக அமையும்!” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -

தொடர்ந்து பேசிய அவர் ” மூடப்பட்டிருந்த இரண்டு ஸ்டாண்டுகளும் திறக்கப்பட்டு விடும். மேலும் மகேந்திர சிங் தோனிக்கு வழி அனுப்பும் விதமாக மைதானம் நிரம்பி வழியும். சென்னை விசில் அடித்துக் கொண்டே இருக்கும். ஆனால் இதைத் தாண்டி இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் அவரது கடைசி தொடரில் அவர் நன்றாக செயல்பட வேண்டும்!” என்று விரும்புகிறார்கள் என்று கூறியிருந்தார்.

சென்னை அணி சார்பில் யார் அதிக ரன்கள் அடிப்பார்கள் விக்கெட் எடுப்பார்கள் என்று கூறிய அவர் “சென்னை அணி தரப்பில் ருத்ராஜ் மற்றும் கான்வோ இருவரும் அதிக ரன்கள் எடுப்பார்கள். அதேபோல் தீபக் மற்றும் பிரட்டோரியஸ் இருவரும் அதிக விக்கெட் எடுப்பார்கள். நான் கான்வோ மற்றும் தீபக் இடம் செல்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!