வெஸ்ட் இண்டீஸ் வீரர் சிம்ரோன் ஹெட்மையரின் தற்பொழுதைய டாப் 4 டெஸ்ட் வீரர்கள் – ஸ்மித், ரூட், ரோஹித் இல்லை

0
104
Shimron Hetmeyer

மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த சிம்ரோன் ஹெட்மையர் அதிரடியாக விளையாடக்கூடிய வீரர் ஆவார். குறிப்பாக டி20 போட்டிகளில் அவரது ஆட்டம் மிக அதிரடியாக இருக்கும். ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட தயாராக இருக்கிறார். கடந்த ஆண்டு டெல்லி அணியில் விளையாடி அவரை இந்த ஆண்டு ராஜஸ்தான் அணி
8 கோடியே 50 லட்ச ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடந்த உரையாடலில் அவரிடம் தற்பொழுது உள்ள டெஸ்ட் வீரர்கள் மத்தியில் உங்களுக்கு பிடித்த டாப் ஃபோர் வீரர்கள் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அந்தக் கேள்விக்கு அவர் தற்போது பதில் அளித்துள்ளார்.

- Advertisement -

சிம்ரோன் ஹெட்மையர் க்கு பிடித்த டாப் ஃபோர் டெஸ்ட் வீரர்கள் :

அந்தக் கேள்விக்கு பதிலளித்த அவர் முதலிடத்தில் நியூசிலாந்து அணியை சேர்ந்த கேன் வில்லியம்சனையும், இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மிட்செல் ஸ்டார்க்கையும், மூன்றாவது இடத்தில் இந்தியாவைச் சேர்ந்த விராட் கோலியையும், நான்காவது இடத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த ஜேசன் ஹோல்டரையும் குறிப்பிட்டுள்ளார்

சிம்ரன் ஹெட்மையர் குறிப்பிட்ட நான்கு வீரர்களில் முதலிடத்தில் இருக்கும் கேன் வில்லியம்சன் தற்போது ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை புள்ளி பட்டியலில் 844 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளார்.

அவர் குறிப்பிட்டுள்ள ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மிட்செல் ஸ்டார்க் தற்போது ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் 719 புள்ளிகள் பெற்று 16 வது இடத்தில் உள்ளார்.

- Advertisement -

ஹெட்மையர் குறிப்பிட்டுள்ள மூன்றாவது வீரரான விராட் கோலி ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை புள்ளி பட்டியலில் 742 புள்ளிகள் பெற்று ஒன்பதாவது இடத்தில் உள்ளார்.

ஹெட்மையர் குறிப்பிட்டுள்ள 4-வது வீரர் ஆல்ரவுண்டர் வீரர் ஜேசன் ஹோல்டர் தற்பொழுது ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசைப் பட்டியலில் 393 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறார்.

நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் சிம்ரோன் ஹெட்மையர் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முதல் போட்டி வருகிற மார்ச் 29ஆம் தேதி அன்று நடைபெற இருக்கின்றது. அப்போட்டியில் ஹாஸ்டல் ராயல்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.